வியாழன், 14 ஜூன், 2012

மச்சி அவ உன்னை பார்க்கறாடா!!!


இது எனது "ஏன் சார் எனக்கு மட்டும் இப்படி எல்லாம்??"பதிவின் தொடர்ச்சி. லண்டன்ல இருந்து Preston திரும்பி வரும் போது நிகழ்ந்த அனுபவம்அந்த அனுபவத்தை…"டேய் ட்ரைலரை ரொம்ப நேரம் ஓட்டுனா எந்திரிச்சு தம் அடிக்க போய்டுவோம்,ஒழுங்கு மரியாதையா மெயின் படத்தைப் போடு"-னு நீங்க திட்டறது காதுல விழுகுது..அதனால படத்துக்கு சாரி கதைக்கு நேரா போயிடுவோம்

"We have reached Victoria Bus terminal, London. Thanks for traveling with National Express" நம்ம டிரைவர் அண்ணன் குரல் கேட்டு அப்படியே எந்திரிச்சு ஜன்னல் வழியாப் பார்த்தேன். வெளியே மழை லைட்டா தூறிட்டு இருந்திச்சு. பஸ்ல இருந்து இறங்கினா குளிருல அப்படியே வாய் தந்தி அடிக்க ஆரமிச்சது. என் ஃபோன் எடுத்து temperature எவ்ளோனு பார்த்தா 8 டிகிரி. "அடப்பாவிகளா, இப்ப தாண்டா ரெண்டு வாரத்துக்கு முன்னாடி summer start ஆயிடிச்சினு சொல்லி லீவ் எல்லாம் விட்டீங்க. உங்க ஊர்ல 8 டிகிரிக்கு பேரு தான் சம்மர் ஆ???" லண்டன் போறோமே, அங்க கொஞ்சம் பிகருக எல்லாம் high class ஆ இருக்குமேனு பந்தா பண்றதுக்குனு ஒரு jocket போட்டுட்டு வந்ததால கொஞ்சம் தப்பிச்சேன். 

மணியைப் பார்த்தா அப்ப தான் 6:30. நான் போக வேண்டிய இடம் 8:30 க்கு தான் திறப்பான். இன்னும் 2 மணி நேரம் இருக்கு, பரவாயில்லை கொஞ்சம் நிதானமாவே போகலாம். பாக்கெட்ல தடவிப் பார்த்து 30 pents சில்லறை எடுத்தேன். எதுக்குனு கேக்கறீங்களா? லண்டன்ல உச்சா போகணும்னா free a எல்லாம் போக முடியாது. Train station, Bus station nu எல்லா இடத்துலயும் பாரபட்சமே இல்லாம 30 p கப்பம் கட்டியே ஆகனும். 

உள்ள போயி முக்கியமான வேலையை முடிச்சதுக்கு அப்புறமா, மூஞ்சியை நல்லா கழுவி,  perfume  எல்லாம் அடிச்சிட்டு, தலைக்கு ஜெல் தடவிட்டு பார்த்தா, அட அட என் கண்ணே பட்டுடும் போல இருந்திச்சு. குளிக்காம இருக்கிறதை மறைக்க என்னவெல்லாம் பண்ண வேண்டி இருக்கு!!!.

 "டேய் குளிக்காம விட்டுட்ட பரவாயில்லை, நீ இந்த கேப்புல பல்லு விலக்குனதுக்கான அறிகுறி கூட எதுவுமே இல்லையேனு" கூட்டத்துல இருந்து யாரோ குரல் எழுப்பறது கேக்குது.

 "ஹி ஹி ஹி. ஒரு நாள் தானே போறோம் Brush, Paste லாம் எதுக்குனு வீட்டிலேயே வச்சிட்டு வந்துட்டேன்".

 "அட கண்றாவி, ஸ்டைல்காக hair gel, Jocket, perfume lam கொண்டு வர முடியுது, ஆனா paste,Brush கொண்டு வரலை..வெளங்கிடும்ம்ம்-னு"  சொல்றீங்களா?? 

"விடுங்க பிரதர் ஆடு மாடு எல்லாம் தினமும் பல் விலக்குதா என்ன? அதுக்குத் தான் mint flavor ல Chewing gum வச்சு இருக்கேனே!" 

வெளியே வந்தா, மணி 7 ஆச்சு. வேணும்கிற File மட்டும் எடுத்துட்டு 3 pound செலவு பண்ணி bag i left Luggage la போட்டுட்டு train station போனேன். ஏன்னா நான் போகிற இடத்துல bag, laptop lam allow பண்ண மாட்டாங்க.

 "அப்படி எங்கே போறேனு" கேக்கறீங்களா?

 "அது தொழில் ரகசியம், சாரி நீங்க மிரட்டிக் கேட்டாலும் சரி, அடிச்சு கேட்டாலும் சரி, சொல்ல மாட்டேன்".

 அடுத்த நாலு மணி நேரம் நடந்தது எல்லாமே confidential matter.so அதை அப்படியே skip பண்ணிடலாம். வந்த வேலையை முடிச்சிட்டு bus station திரும்ப வந்தப்ப மணி 11:30. என் ஊருக்கு போற பஸ் மதியம் 1:30 மணிக்கு தான்.

 "2 மணி நேரம் இருக்கே, நம்ம 'காத்திருப்பது தானே காதல்' கதையை உருப்படியா உக்காந்து எழுதி முடிச்சிடலாம்னு" நினைச்சு என் Mac book i ஓப்பன் பண்ணினேன்.ரொம்ப சுவாரசியமா எழுதிட்டு இருந்தப்ப, ஏதோ மனசுக்குள்ள ஒரு நெருடல். நிமிர்ந்து பார்த்தேன். 

அங்கே 3 பைங்கிளிக அரட்டை அடிச்சிட்டு இருந்திச்சு..எல்லாமே, ஆங்கிலப் பைங்கிளிகள் தான். அதுல ஒரு பைங்கிளி அப்பப்போ என்னை லுக் விடற மாதிரி இருந்திச்சு. பின்னாடித் திரும்பி பார்த்தேன் யாராச்சும் இருக்காங்களானு. ஏன்னா எத்தனையோ தடவை பின்னாடி இருக்கிறவனுக்கு லைன் அடிக்கும் போது, ஒரு வேளை நம்மளைத் தான் பாப்பா பாக்குதோனு தப்பா நினைச்சு ரொமாண்டிக் லுக் விட்டு நிறைய பல்பு வாங்கி இருக்கோம்ல!.

பின்னாடி யாருமே இல்லை. இருந்தாலும் என்னைத் தான் பார்க்குதுனு நம்ப முடியலை. பின்னே, பார்த்தவுடனே பிடிக்க நான் என்ன "வாலு" சிம்புவா? இல்லை அந்த பொண்ணுதான் ஹன்சிகாவா?

எதுக்கும் கன்பர்ம் பண்ணிக்கலாம்னு, அங்கே இருந்து எந்திரிச்சு அந்த பொண்ணுக்கு side la இருக்கிற சேர்ல உக்கார்ந்தேன். ஒரு ரெண்டு நிமிசம் போயிருக்கும். அவ மறுபடி என்னைத் திரும்பி பார்த்தா. "மச்சி அவ உன்னைப் பார்க்கறாடானு" என் mind voice சொல்ல அப்படியே வானத்துல பறக்கிற மாதிரி ஃபீலிங். 

போன வாரம் Faux Haux i யும் Spikes - யும் மிக்ஸ் பண்ணி ஒரு புது ஸ்டைல்ல hair cut பண்ணிட்டு வந்தப்ப நம்ம நண்பர்கள் எல்லாம், "மச்சா, கலக்குற, அப்படியே அந்த காலத்து David Becham மாதிரி இருக்கேனு" சொன்னானுங்க. ஆனாலும் ஒரு ஓசி "டீ" -கும், ஓட்டை வடைக்கும் ஆசைப்பட்டு தான் சொல்றானுகனு நினைச்சு free a விட்டுட்டேன், ஒரு வேளை உண்மையைத் தான் சொன்னானுகளோ? "சே இந்த மாதிரி பாசக்கார பயலுகளைப் பத்தித் தப்பா நினைச்சுட்டமேனு" ஒரே பீலிங் ஆ போயிடிச்சு.

ஒரு பொண்ணு நம்மளைப் பார்க்குதுனு தெரிஞ்சதுக்கு அப்புறம், எங்கத்த போயி கதை எல்லாம் எழுத? "காலமெல்லாம் காதல் வாழ்க" முரளி மாதிரி அப்பப்ப ஓரக் கண்ணால சைட் அடிச்சிட்டே time pass பண்ணிட்டு இருந்தேன். கொஞ்ச நேரம் கழிச்சு, "இதுலாம் சரிப்பட்டு வராது,  போய் அந்த பொண்ணுகிட்ட நம்மளை introduce பண்ணி, கொஞ்சம் கடலையை வறுக்கலாம்னு" நினைச்சு எந்திரிச்சேன். இந்த ஊருப் பொண்ணுக US பொண்ணுக அளவுக்கு ரொம்ப ஜாலி, open type கிடையாது. ஆனா நம்ம ஊர் பொண்ணுகளை மாதிரி எதுக்கெடுத்தாலும் செருப்பை கழட்டற ரகமும் கிடையாது. அந்த தைரியம் தான்! 

நான் 4 அடி கூட எடுத்து வைச்சு இருக்க மாட்டேன். ஒரு பைங்கிளி ஏதோ சொல்லி, மத்த ரெண்டு பைங்கிளியையும் எழுப்பி இழுத்துட்டு போயிடிச்சு. போகும் போது, என் பிகர், அப்படியே "சுப்ரமணியபுரம்" சுவாதி மாதிரி திரும்பி ஒரு look விட்டிச்சு பாருங்க! அப்படியே, மனசுக்குள்ள ஆயிரத்தெட்டு பட்டாம்பூச்சி பறக்கற பீலிங். 

எனக்கு follow பண்றதா வேண்டாமானு ஒரே குழப்பம். சரி அங்க சுத்தி இங்க சுத்தி, கடைசியா இங்க தானே வந்தாகணும்னு wait பண்ண ஆரமிச்சேன். 5 நிமிசம் ஆச்சு வரலை, 10 நிமிசம் ஆச்சு வரலை. 13 ஆவது நிமிசம் வயித்துக்குள்ளே மறுபடி பீலிங், ஆனா இந்த time வேற பீலிங். பசி வயித்தைக் கிள்ள ஆரமிச்சிடிச்சு. சாப்பிட்டு வந்து பார்த்துக்கலாம்னு வெளியே சாப்பிடப் போனேன்.

கரெக்டா, 1:15 க்கு மறுபடி பஸ் ஸ்டாண்ட் வந்தேன். Display la 18 ஆம் நம்பர் platform la இருந்து என் பஸ் போகும்னு போட்டு இருந்தான். அந்த பொண்ணு இருந்த இடத்துக்கு அப்படியே Opposite. அவளைப் பார்க்க போனா, லேட் ஆயிடும், மறுபடி டிரைவர்ட்ட இருந்து கெட்ட வார்த்தைல திட்டு வாங்கணும். பஸ்-க்கு போனா அவளை அதுக்கு அப்புறம் பார்க்கவே முடியாது. இப்படி ஒரு இக்கட்டான நிலைமை. சரி திட்டு வாங்குறது நமக்கு என்ன புதுசா? அந்த பொண்ணு இருந்த இடத்துக்கு போனேன். அங்க போனா யாருமே இல்லை. வடை போச்சே!!! 

சரி நமக்கு கொடுத்து வைச்சது அவ்ளோதான்னு நினைச்சுட்டு platform 18 போனேன். என்னால நம்பவே முடியலை. அங்க என் பைங்கிளி! ஒரே குஷியா பஸ் ஏறினேன். அவளும் என்னைப் பார்த்தா, அவ முகத்துலயும் ஒரு "பளிச்". அவ சீட்டுக்கு ரெண்டு சீட் முன்னாடி உக்கார்ந்தேன். 

மனசுக்குள்ளே ஒரு calculation. "அடுத்து வண்டி 2 மணி நேரம் கழிச்சு Birmingham la நிக்கும். அங்க போயி அவளோட பேசறோம். அதுக்கு அப்புறம் மிச்சம் இருக்கிற 4 மணி நேரம் அடுத்தடுத்த சீட்ல"...ஐயோ நினைக்கவே குஜாலா இருந்திச்சு. இப்ப ஒரு கனவு scene வைச்சே ஆகணுமே! நைட்லாம் travel பண்ணுன tiredness , கனவு காண Theme கிடைச்ச சந்தோசம், அப்படியே கண்ணை மூடினேன்.

திடீர்னு முழிச்சுப் பார்த்தா வண்டி நின்னுட்டு இருக்கு ஆனா யாருமே இல்லை. வெளியே எட்டிப் பார்த்தா Birmingham bus stand. அவசர அவசரமா வெளியே வந்து என் பைங்கிளியைத் தேடினேன். 2 நிமிசத் தேடலுக்கு அப்புறமா, அங்க இருந்த ஒரு கடைல கண்டு பிடிச்சேன். லண்டன் மாதிரி குளிராம இங்கே நல்ல வெயிலா இருந்திச்சு. அதனால என் ஆளு போட்டிருந்த Jocket ஐ கழட்டிட்டு ஒரு casual T-Shirt ஒட நின்னுட்டு இருந்திச்சு. 

அந்த கடைக்குள்ள நானும் போனேன். நான் நுழைஞ்சதை அவளும் பார்த்தா. கொஞ்சம் தைரியத்தை வர வைச்சிட்டு, அவளைப் பார்த்து போனேன். இன்னும் ரெண்டே ஸ்டெப் தான். அப்ப அவ Friend " Hey Stef, look at this " nu கூப்பிட. அவ திரும்ப 

எனக்கு அப்படியே ஒரு ஷாக். அவ T-shirt la "Going to be Bride" அப்படினு கொட்டை எழுத்துல எழுதி இருந்திச்சு. 

அப்படியே மனசு காத்து போன பலூன் மாதிரி ஆயிடிச்சு.எதுவும் பேசாம திரும்ப பஸ்-க்கு வந்துட்டேன். அவ பஸ்ல என்னைத் தாண்டி போகும் போது ஒரு மாதிரி confused ஆ எனைப் பார்த்தா. நான் ஜன்னல் பக்கமா திரும்பி வெளியே வேடிக்கை பார்க்க ஆரமிச்சுட்டேன். 

"நம்ம ஊருப் பொண்ணுக எல்லாம் வகிட்டுல குங்குமம் style ku வைக்கிற fashion வந்திட்ட மாதிரி, ஒரு வேளை இதுவும் Style காக இருக்குமோ?" என் மனசுக் கேள்வி கேட்டுச்சு. 

அப்போ மனசுக்குள்ள இன்னொரு குரல், "வேண்டாம்டா சாமி, Engaged ஆனது, Boy Friend இருக்கிற கேஸ்னு எல்லா episode um நாம பார்த்தாச்சு. மின்னலே, காதல் மன்னன்-னு  படத்துல வேணா எல்லாம் Happy ending ஆ இருக்கும். ஆனா உண்மையில சேது, பிதாமகன் மாதிரி Typical பாலா பட ending ஆ தான் முடியும். அதனால அமைதியா இருனு" சொல்லிச்சு. அதுவும் சரிதானு நினைச்சுட்டு, அப்படியே தூங்கிட்டேன். 

Preston வந்திருச்சுனு Driver announce பண்ணுனதும் தூக்கம் கலைஞ்சது. படிக்கட்டுல இறங்குறப்ப பின்னாடி அவ Friend அவளைத் திட்டறது அரை குறையா கேட்டிச்சு.

"Stef, you are so stupid. (தமிழாக்கம்) அவன் பேசலைனா என்ன? நீ பேசி இருக்க வேண்டியது தானே?! " .

இங்கேயே முற்றும்-னு போட்டு என் "David Becham Hair style" i Justify  பண்ணி முடிச்சிடலாம்னு தான் பார்த்தேன். ஆனா மனசாட்சி ஒத்துக்கலை. 

அதுக்கு என் பிகரு சொல்லிச்சு, "free ஆ விடு மச்சி,  ஓசில பீர் வாங்கித் தர வேற எவனாவது சிக்காமயா போயிடுவான்" - மறுபடி தலை சுத்த ஆரமிச்சது..ஏன் சார் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது?!

-பயணம் முடிவுற்றது.


கருத்துகள் இல்லை: