வெள்ளி, 8 ஜூன், 2012

காத்திருப்பது தானே காதல் - பாகம் 4


சனிக்கிழமை, இரவு 7:30 மணி
இடம் : ஈஸ்ட் இஸ் ஈஸ்ட் இந்தியன் ரெஸ்டாரண்ட்.

மாலினிக்காக காத்திருக்கையில், அன்று காலை நடந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தேன்.

"ஒகே, எங்கே? " - நிறைய யோசனைக்குப் பிறகு மாலினி கூறியதும் தான் எனது இதயத் துடிப்பு நார்மலானது. ஆனால் அவள் மனதில் என்ன நினைத்தாள் என்ற குழப்பம் இருந்து கொண்டே இருந்தது. 


வேண்டாம் எனச் சொன்னால், என்னை மறுபடியும் அவமானப் படுத்தியது போல இருக்கும் என்று நினைத்து சொன்னாளா? அல்லது அவளுக்கும் என்னுடன் வெளியே செல்வது பிடித்து சொன்னாளா? என்று இந்த நிமிடம் வரை தெரியவில்லை. என் மனதில் ஓராயிரம் கேள்விகள்

ஒரு வேளை இது தான் காதலோ? "சே சே அப்படி எல்லாம் இருக்காது" என்று மறுத்தது என் மனம். 

என்னைப் பொறுத்த வரை காதல் என்பது இரண்டு வகை மட்டுமே, ஒன்று "லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்". மாலினி விசயத்தில் இதைக் கண்ணை மூடிக் கொண்டு கிராஸ் மார்க் போட்டு விடலாம். அடுத்து, "நன்றாகப் பழகிப் பார்த்து வருவது", மாலினியும் நானும் இப்போது தான் பழகவே ஆரம்பித்து இருக்கிறோம். அதனால் இந்த ரகத்திலும் அது பொருந்தி வராது. 

என் மனதில் பல குழப்பம் இருக்க, "காரணம் என்னவாகவோ இருக்கட்டும், இந்த ஃபீலிங் எனக்கு பிடித்து இருக்கிறது. ஆராயாமல் ஜஸ்ட் என்ஜாய் இட்" என்று என் மனம் சொன்னதை எண்ணி அமைதியானேன்.

அப்போது அவள் உள்ளே நுழைந்தாள்.

"வாவ், யூ ஆர் லுக்கிங் சோ கார்ஜியஸ்" என்று வரவேற்றேன்.

வெட்கம் கலந்த சிரிப்புடன் "தேங்ஸ்" என்றாள்.

அவளின் மேல் நிதானமாக என் பார்வையை ஓட விட்டேன்.

அவள் தோள் பட்டைக்கும் கொஞ்சம் கீழ் வரை இருந்த தலைமுடியை அப்படியே ஃப்ரீயாக விட்டு ஒரு சைட் இல் மட்டும் காதோரமாய் ஆடைக்கு மேட்சிங் ஆக பின் குத்தி இருந்தாள்.அவள் புருவங்கள், நேர்த்தியாக்கப் பட்டு, கண் இமைகளின் மேலே மிகவும் மெல்லிய நீல நிறத்தில் சாயம் பூசி இருந்தாள்.கன்னங்களில் பூசியிருந்த சாயம், அவளது கன்னங்களை இன்னும் எடுப்பாகவும், சிவப்பாகவும் காமித்தது. காதுகளில் சிலந்தி வலை போல நீலமும் வெள்ளையும் கலந்த  நிறத்தில் பெரிய காதணி. அவளது உதடுகள் இயற்கையிலேயே ரோஜா இதழ்களின் வண்ணத்தில் இருந்ததால், எவ்வித சாயமும் இல்லாமலேயே மின்னியது.

ஒரு நீல நிற கையில்லா ஆடை அணிந்து இருந்தாள்.மிகவும் நீளமானதாகவும் இல்லாமல், மிகவும் சிறியதாகவும் இல்லாமல், சரியாக முட்டி வரை இருந்தது.கழுத்தில் மிகவும் மெல்லிய செயின்..அதன் முடிவில் ஒரு வித்தியாசமான வடிவத்தில் ஒரு டாலர் அவள் ஆடைக்கு வெளியே துவங்கி உள்ளே சென்று  மறைந்தது. அது மறையும் இடத்தில் என் பார்வை இரண்டு நொடிகள் நிலைத்து பின் கீழ் இறங்கியது. ஜீன்ஸ் படத்தில், வைரமுத்து உபயோகித்த "அந்த வரிகள்" ஒரு நொடி என் மனதில் வந்து போனதை தவிர்க்க முடியவில்லை.

எந்தப் பெண்ணும் என்னை இவ்வளவு உன்னிப்பாக கவனிக்க வைத்தது இல்லை. அவளைப் பார்க்க பார்க்க அவளின் மேல் ஈர்ப்பு அதிகமாகிக் கொண்டே இருந்தது.
அவளைப் பிடித்ததால் அழகாகத் தெரிகிறாளா? அல்லது அவளின் உண்மையான அழகு இப்போது தான் தெரிய ஆரம்பித்ததா? சில கேள்விகளுக்கு விடைகள் எப்போதுமே கிடைப்பதில்லை!!!.

"சார், ரெடி டூ ஆர்டர்???" - சர்வரின் குரல் கலைத்தது. 

"5 மினிட்ஸ் ப்ளீஸ்" சர்வர் நகர, நான் மாலினியிடம்.

"இங்க, மாக்டெய்ல்ஸ் நல்லா இருக்கும், அதுவும் கிவி, லெமன் அண்ட் புதினா எல்லாம் மிக்ஸ் பண்ணி ஒரு ஃப்ளேவர் பண்ணித் தருவான் பாரு, சூப்பரா இருக்கும், ட்ரை பண்றியா? "

மாலினி உடனே "ஹேய், நீ எனக்கு ஏதாச்சும் ஹாட் ஆ வைன், பீர்னு வாங்கி தருவேனு பார்த்தா, இப்படி இலை, தழை மேட்டர் லாம் சொல்லிட்டு இருக்கே "

"உன் மேல இருந்த மரியாதையே போயிடிச்சு மாலினி" - நான் சீரியசாக சொல்ல, அவள் முகம் சிறிது மாறத் தொடங்கியது.

"Glenn Feddich, Edrodour இப்படி ஏதாச்சும் ஒரு நல்ல ஸ்காட்ச்சா கேட்டிருந்தா சந்தோசப் பட்டு இருப்பேன்..அதை விட்டுட்டு, இப்படிச் சின்ன குழந்தை மாதிரி " - சிரித்துக் கொண்டே சொல்ல, அவள் முகத்தில் சிரிப்பு மறுபடி படர்ந்தது.

"ஹேய், பட் ஐ வாஸ் சீரியஸ், ரொம்ப நாளா எப்படி இருக்குனு டேஸ்ட் பண்ண ஆசை, ஆனா இது நாள் வரைக்கும் ட்ரை பண்ணவே இல்லை..ரொம்ப எல்லாம் வேணாம், இதோ இத்துனூண்டு..ரெண்டே ரெண்டு சொட்டு" - குழந்தைத் தனமாய் கண்களை சுருக்கிக் கேட்ட அவளைப் பார்க்க ஆச்சர்யமாய் இருந்தது. 

"அது தான் குடிக்கிறதனு ஆயிடிச்சு இல்ல, அப்புறம் என்ன போலியோ டிராப் மாதிரி ரெண்டு சொட்டு, ஒரு பாட்டில் வாங்கித் தரேன் ஃபுல்லா குடி" - நான் சொல்லியதைக் கேட்டதும்.

அவள், "சே சே, ஏதோ ஆசைக்கு அவ்வளவு தான்நான் அக்மார்க் தமிழ் பொண்ணாக்கும், அதனால் அவ்வளவு எல்லாம் வேண்டாம்" 

"சரிமா தாயே, நீ மாடர்ன் டிரெஸ் போட்ட மங்காத்தா தான்.. ஒத்துக்கறேன்" என்று கை கூப்பி வணங்கஇருவரும் சேர்ந்து சிரித்தோம்.

ஒரு ஆஸ்ட்ரேலியன் ரெட் வைன் ஆர்டர் பண்ணி, அவள் இரு சிப் மட்டும் குடிக்க, மீதியை நான் குடித்தேன். பிறகு, உணவு வகைகளை ஆர்டர் பண்ணி விட்டு, பேசிக் கொண்டு இருந்தோம்.

குடும்பம், நண்பர்கள், பொழுதுபோக்கு, பிடித்தவை, பிடிக்காதவை எனப் பேச்சு வளர்ந்து கொண்டே சென்றது. எங்களுக்குள்ளே ஒரு நல்ல கெமிஸ்ட்ரி இருப்பதை இருவருமே உணர்ந்தோம். மாலினியிடம் கொஞ்சம் கொஞ்சமாக என்னை இழந்து கொண்டிருந்தேன். இரண்டு மணி நேரம் எப்படிப் போனது என்றே தெரியவில்லை. சிரித்து சிரித்து, அவளுக்கு கண்களில் தண்ணீரே வந்து விட்டது. 

அப்போது அவள் கைப்பையில் இருந்த அவளது மொபைல் அதிரத் தொடங்கியது. அதனை எடுத்து திரையில் இருந்த பெயரைப் பார்த்ததும் அவள் முகம் மாறியது. கட் பண்ணாமல் சைலண்ட்-இல் மட்டும் போட்டாள். என்னிடம் ஏதோ பேச எத்தனிக்கையில், மறுபடியும் அதே எண்ணிலிருந்து ஃபோன். சலிப்புடன் மீண்டும் சைலண்டில் போட்டவளைப் பார்த்து

"நீ பேசு, எனக்கு நோ ப்ராப்ளம்" என்றேன்.

உடனே அவள். "இல்லை வேண்டாம், இப்போ நல்ல மூட் ல இருக்கேன், அழறதுக்கு தயாரா இல்லை" - என்றாள்.

"அப்படி யாரு ஃபோன்ல" - நான் குழப்பத்துடன் அவளைப் பார்த்துக் கேட்க.

ஒரு நிமிடம் சொல்லலாமா வேண்டாமா என்ற யோசித்து விட்டு, "என்னோட Fiancee" என்றாள்.

என் முகம் அதைக் கேட்டதும் அப்படியே மாறியது. அதில் அதிர்ச்சியை விட ஏமாற்றம் அதிகமாகத் தெரிந்தது.

"வ்வ்வாட் "- நம்ப முடியாமல் கேட்ட என்னிடம் அவளது தலையைக் குனிந்து கொண்டே அவளது கைகளை உயர்த்திக் காமித்தாள். அவளது மோதிர விரலில்  "R" என்ற எழுத்துடன் தங்க மோதிரம் மின்னிக் கொண்டு இருந்தது.

-காத்திருப்பு தொடரும்.

9 கருத்துகள்:

Gokul சொன்னது…

You are maintaining things required to continue reading...every ending :)

யுகேந்தர் சொன்னது…

நல்ல எழுத்து நடை பாஸ்... படிக்கும் போதே காட்சி படுத்த முடியுது...

யாருக்கிட்டேயோ நல்ல்ல்லா ஜொள்ளு விட்டு இருக்கீங்கனு மட்டும் தெரியுது..

ஆல் தி பெஸ்ட்....

Superstar Prasaath சொன்னது…

Unakulle oru eluthalan irukan...theeya kadai eluthanum tyagu..

FunScribbler சொன்னது…

//அவள் தோள் பட்டைக்கும் கொஞ்சம் கீழ் வரை இருந்த தலைமுடியை அப்படியே ஃப்ரீயாக விட்டு ஒரு சைட் இல் மட்டும் காதோரமாய் ஆடைக்கு மேட்சிங் ஆக பின் குத்தி இருந்தாள்.அவள் புருவங்கள், நேர்த்தியாக்கப் பட்டு, கண் இமைகளின் மேலே மிகவும் மெல்லிய நீல நிறத்தில் சாயம் பூசி இருந்தாள்.கன்னங்களில் பூசியிருந்த சாயம், அவளது கன்னங்களை இன்னும் எடுப்பாகவும், சிவப்பாகவும் காமித்தது. காதுகளில் சிலந்தி வலை போல நீலமும் வெள்ளையும் கலந்த நிறத்தில் பெரிய காதணி. அவளது உதடுகள் இயற்கையிலேயே ரோஜா இதழ்களின் வண்ணத்தில் இருந்ததால், எவ்வித சாயமும் இல்லாமலேயே மின்னியது.//


hahaha boss....இத வச்சு பாக்கும்போது.... உண்மை கதையோனு தோணுது?? ஆனா பாஸ், ரொம்ப அழகா describe பண்ணிட்டீங்க! awesome!

FunScribbler சொன்னது…

//சில கேள்விகளுக்கு விடைகள் எப்போதுமே கிடைப்பதில்லை!!!.//

wowwwwwwwww!!! top gear போட்டு தூக்கிட்டீங்க பாஸ்!!

FunScribbler சொன்னது…

superb way to end this episode!!

Unknown to myself சொன்னது…

//hahaha boss....இத வச்சு பாக்கும்போது.... உண்மை கதையோனு தோணுது?? ஆனா பாஸ், ரொம்ப அழகா describe பண்ணிட்டீங்க! awesome!//

இதுக்கெல்லாம், நம்ம வாழ்க்கைல உண்மையாவே நடந்திருக்கணும்னு அவசியம் இல்லைங்க..ஒரு நாள்ல எவ்ளோ பொண்ணுகளைப் பார்க்கிறோம், இந்த அவளுக்கு கூட brain process பண்ணலைனா, அப்புறம் மூளை இருந்து என்ன அர்த்தம்??

அதுக்காக இது நடக்கலைனு நான் சொல்றதா நீங்க எடுத்துக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பு இல்லை :)

Unknown to myself சொன்னது…

//You are maintaining things required to continue reading...every ending :) //

Thanks Gokul...இப்ப சொல்லு, நாம 3 years ku முன்னாடி பிளான் பண்ணுன மாதிரி, நான் கதை எழுதி படம் எடுக்க , நீ sponsor பண்ணுவியா??

Gokul சொன்னது…

Thanks Gokul...இப்ப சொல்லு, நாம 3 years ku முன்னாடி பிளான் பண்ணுன மாதிரி, நான் கதை எழுதி படம் எடுக்க , நீ sponsor பண்ணுவியா??

//You are giving good hope for it.

But they are lot of good stories which could not make a impact on screen.

But ll see ;) ;)