செவ்வாய், 5 ஜூன், 2012

காத்திருப்பது தானே காதல் - பாகம் 2.

பாகம் -1பாகம் - 3பாகம் - 4,பாகம் - 5,பாகம் - 6

அடுத்த நாள் காலை 9:30 மணி,

அலுவலக வேலையில் ஆழ்ந்திருந்த போது மீண்டும் அதே குரல்
"டோண்ட் வொரி விகாஸ், வீ வில் ஃபினிஸ் இட் இன் டைம்" - அவள் இரண்டு வரிசை தாண்டி அமர்ந்திருந்த மேனேஜரிடம் பேசிக் கொண்டு இருந்தாள்.

"ஆகா எங்கேயோ பார்த்திருக்கேனு நினைச்சா கடைசில ஒரே ஆஃபிஸ், அப்புறம் ஏன் உடனே நியாபகம் வரலை" என் மனம் கேள்வி எழுப்பியது.

சுற்றிலும் பார்வையை செலுத்தினேன். 

கார்னரில் அதோ பஞ்சாபி பெண்களுக்கே உரிய ஒரு பொலிவுடம் Komal அவளது ஸ்பெசல் ட்ரெட் மார்க் சிரிப்புடன் பக்கத்தில் உள்ள Mark உடன்(ம்ம்ம் மச்சக்கார பையன்) கடலை போட்டுக் கொண்டு இருந்தாள். 

அவளைத் தாண்டி இரண்டு சீட் தள்ளி, நொடிக்கு ஒரு தரம், நெற்றியில் சரியும் முடியை ஒதுக்கியவாறே மானிட்டரில் ஆழ்ந்திருக்கும் அழகிய மெழுகு சிலை Lydia. 

ஆபிஸ் என்று கூட பாராமல் எப்போதும் party wear இல் வந்து அனைத்து ஆண்களின் பெரு மூச்சையும் எகிறடித்துக் கொண்டிருக்கும் ஐரிஸ் ஐட்டம் Kyna.

எப்போதும் போல தன் சீட்டில் இல்லாமல் அடுத்தவர்களைக் கலாய்த்துக் கொண்டு அனைவரது பார்வையையும் தன் மீது கவர்ந்து இழுத்துக் கொண்டு இருந்த  பிரிட்டிஷ் பிகர் Flora.
"இப்படி சுற்றிலும் வித விதமான அழகானப் பூக்கள் இருக்க அதன் நடுவே இருந்த கருவேப்பிலைச் செடியை நம்ம மூளை ப்ராசெஸ் செய்யாமல் விட்டு விட்டதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை" என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு தெளிவானேன். 

அவளிடம் சென்று, "நான் நேத்து உன்னை கரெக்ட் பண்ண ட்ரை பண்ணலை, உண்மையத் தான் சொன்னேன்" என்று சொல்ல வேண்டும் என நினைத்தேன். ஆனால் நேற்று பட்ட அவமானம் கண் முன்னால் வந்து செல்ல, நினைத்த நொடியே அந்த எண்ணத்தை தூக்கி எறிந்தேன். 

திரும்பி வருகையில் அவளும் என்னை கவனித்திருக்க வேண்டும்.பார்த்ததும் நின்றாள்.ஒரு நிமிட யோசனைக்குப் பின் எதுவும் பேசாமல் சென்று விட்டாள்.

பின் வேலை பிஸியில் அவளைப் பற்றிய நினைவுகள் கரைந்தோட அடுத்த நாள் டெலிவர் பண்ண வேண்டிய வேலையில் ஆழ்ந்தேன். சிறிது நேரத்திற்கு பிறகு என்ன பிஸியா இருந்தாலும் என்னை சரியான நேரத்தில் நீ கவனிக்க வேண்டும் என்று என் உடலின் உள்ளே அவசர மணி அடிக்க ரெஸ்ட் ரூமை நோக்கிச் சென்றேன். அங்கே காரிடாரில் நடக்கும் போது, மீண்டும் அவள்.

"ஹலோ, ஒரு நிமிசம் நான் உங்க கிட்ட பேசனும்" - அவள் தயக்கத்துடன் கூறினாள்.

நான் "ஓ, கொஞ்சம் அவசர வேலையா போயிட்டு இருக்கேன், ஐ வில் பீ பேக் இன் எ மினிட்" 

"நோ ப்ராப்ளம், ஐ வில் வெய்ட் இன் தி லாபி" என்று அங்கே இருந்த இருக்கைகளை நோக்கி நகர்ந்தாள்.

அவளை ஒரு நிமிடம் காக்க வைத்ததிலேயே நான் ஏதோ பெரிய வெற்றி அடைந்தது போல "யெஸ் யெஸ்" என்று கை முட்டியை மடக்கி வெற்றிக் களிப்புடன் ரெஸ்ட் ரூமில் நுழைய, அங்கு இருந்த அனைவரும் என்னை வினோதமாக பார்த்தார்கள். அப்போது தான் நான் இருக்கும் இடம் உணர்ந்து அமைதியாக சென்ற வேலையை கவனித்தேன்.

பின் லாபி சென்று, அவளை நோக்கிச் சென்றேன், என்னைப் பார்த்தும் எழுந்து,

"ஐ யம், மாலினி" என்று கை கொடுத்தாள். "த்யாகு" என்று பதிலுக்கு நானும் கை கொடுத்தேன்.

"அன்னைக்கு நடந்ததுக்கு சாரி, நீங்களும் நம்ம ஆபிஸ் னு தெரியாம அப்படி நடந்துக்கிட்டேன் ஐ யம் ரியலி வெரி சாரி" என்றாள். அவளது குரலில் உண்மையான வருத்தம் தெரிந்தது.

நான் "இட்ஸ் ஓகே, அதை நான் நேத்தே மறந்துட்டேன்" என்று பெருந்தன்மையானவனாகக் காட்டிக் கொள்ள பொய் சொன்னேன்.

"தேங்ஸ்" அவள் முகத்தில் ஒரு நிம்மதி தெரிந்தது.

அப்படியே இருவரும் இருக்கை நோக்கி திரும்பி போகையில் அவளிடம் பேச்சுக் கொடுத்தேன். "வீக் எண்ட் ப்ளான் லாம் போட்டாச்சா?" 

அவள், " எங்கேயும் போற மூட் இல்லை..அதனால  வீட்டுல தான்"

"நான் என்ன முட்டாளா, என்ன ஆச்சுனு கேட்டு மறுபடி பல்பு வாங்க", அதனால் அமைதியாக இருந்தேன். 

"நீங்க எங்கேயும் போகலையா???" என்னைத் திருப்பிக் கேட்டாள்.

"நம்ம கம்பெனியோட நாலு தூண்ல, நானும் ஒரு தூண். நான் போயிட்டா கம்பெனி அப்படியே சாஞ்சிடும்" என்றேன். அதற்கு சிரித்தாள்.

"இது தான் முதன் முறை" என்றேன்.புரியாமல் என்னைப் பார்த்தாள்.

"நீங்க சிரிப்பது" என்றேன்.

அதற்கும் சிரித்து விட்டு அவள் இருக்கையை நோக்கி நகர்ந்தாள். சிரிக்கும் போது ஏனோ தெரியவில்லை என் கண்களுக்கு கொஞ்சம் அழகாக தெரிந்தாள். என் மனம் சொல்லியது.

"சே சே, இது அட்டு ஃபிகர்லாம் இல்லை. கொஞ்சம் சுமாரான ஃபிகர் தான். டிங்கரிங், பெயிண்டிங் வேலை எல்லாம் பண்ணுனா நல்லாவே இருப்பா"

-காத்திருப்பு தொடரும்.

1 கருத்து:

FunScribbler சொன்னது…

//"இது தான் முதன் முறை" என்றேன்.புரியாமல் என்னைப் பார்த்தாள்.

"நீங்க சிரிப்பது" என்றேன்.//


அட அட அட பின்னீட்டீங்க பாஸ்!!:)))