ஞாயிறு, 10 ஜூன், 2012

காத்திருப்பது தானே காதல் - பாகம் 6( முடிவுற்றது)

பாகம் -1பாகம் - 2 ,பாகம் -3பாகம் - 4பாகம் - 5

அடுத்த நாள் காலை - 7 மணி
இடம் : Avenham Park

மாலினி தான் ஆரம்பித்தாள். "த்யாகு, உன்னை முதல் முதலா ஆஸ்டால பார்த்தப்ப என் வாழ்க்கைல நீ இவ்வளவு impact create பண்ணுவேனு நினைக்கவே இல்லை. உண்மையை சொல்லணும்னா அப்போ உன்னைப் பத்தி கேவலமாத் தான் நினைச்சேன் "

நான், "இதுல ஆச்சர்யப்பட என்ன இருக்கு? நான் உன்னைப் பத்தி நினைச்சதை சொன்னா இன்னும் கேவலமா நினைப்ப. இப்ப அதுவா முக்கியம்? "

மாலினி, "அப்படி என்ன நினைச்ச " அவளால் ஆர்வத்தை அடக்க முடியாமல் கேட்டாள்.

நான் சிரித்துக் கொண்டே, "ஒரு நாள் கதையா எழுதறேன், படிச்சுத் தெரிஞ்சிக்கோ". 

மாலினி, "ஹும்..அப்புறம் அடுத்தடுத்து நாம மீட் பண்ணி, உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிடிச்சு. நீ என்னை வெளியே கூப்பிட்டப்ப எனக்கு கல்யாணம் ஆகப் போகுதுனு சொல்லவா வேண்டாமானு ஒரே confusion, ஆனா நீ எந்த எண்ணத்துல என்னை வெளியே கூப்பிடறேனு எனக்குத் தெரியலை. நீ ஒரு நட்போட கூப்பிட்டு இருந்து, எனக்கு நிச்சயம் ஆயிடுச்சுனு சொன்னா உன்னை ரொம்ப அவமானப் படுத்தின மாதிரி இருந்திருக்கும். அதனால தான் சொல்லலை"

அவள் ஏதோ ஒரு பெரிய குண்டு தூக்கிப் போடத் தான் இப்படி பீடிகையுடன் ஆரம்பிக்கிறாள் என்று என் மர மண்டைக்கு அப்போது தான் கொஞ்சம் புரிய, சீரியசாய் அடுத்து என்ன சொல்லப் போகிறாள் என கவனித்தேன். அவளாகத் தொடர்ந்தாள்.

"அப்புறம் நேத்து டின்னர், அதுக்கு அப்புறம் நமக்குள்ள நடந்தது. என் வாழ்க்கைல மறக்கவே முடியாத மூணு மணி நேரம் த்யாகு. இவ்வளவு சந்தோசமா இதுவரைக்கும் நான் இருந்ததே இல்லை. ரொம்ப தேங்ஸ் த்யாகு, உன்னை எப்பவும் நான் மறக்கவே மாட்டேன். ஆனா " சொல்லுவதற்கு தயங்கி நிறுத்தினாள்.

"ஆனா??? " கேள்விக்குறியுடன் அவளை நோக்கினேன்.

"ஆனா, இனிமேல் நமக்குள்ள எதுவும் வேண்டாம் " - அவளது கண்கள் கலங்கியது. என் பார்வையைத் தவிர்க்க முகத்தைத் திருப்பி வேறு பக்கம் பார்த்தாள்.

அதிர்ச்சியுடன் நான், " எதுவும் வேண்டாம்னா, புரியற மாதிரி சொல்லு மாலினி"

"இனி நாம பேச வேண்டாம் த்யாகு, நாம விலகி இருக்கிறது தான் ரெண்டு பேருக்கும் நல்லது " - அழுகையை அடக்கிக் கொண்டு பார்வையை இன்னும் என் பக்கம் திருப்பாமல் பதில் அளித்தாள்.எனக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. 

"மாலினி, பட் வொய். நீ மட்டும் சரினு சொல்லு, உங்க வீட்டுல நான் பேசறேன். உன் அப்பாவை கன்வின்ஸ் பண்ண முடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு"- உண்மையாகவே எனக்கு அந்த நம்பிக்கை இல்லாவிடிலும் அவளுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்காக சொன்னேன்.

மாலினியோ, "அது முடியாது த்யாகு, என் வீட்டைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும். என்னை வேண்டாம்னு தலை முழுகுவாங்கலே தவிர இதுக்கு என்னைக்கும் ஒத்துக்க மாட்டாங்க."

நான் பேச வாய் திறக்கும் முன், "எந்த சூழ்நிலைலயும் அவங்களை வேண்டாம்னு தூக்கிப் போட்டுட்டு என்னால வரவும் முடியாது "

நான், "அதுக்காக உனக்கு பிடிக்காத வாழ்க்கையை ஒத்துக்கப் போறியா?? "

மாலினி, " என் தலை எழுத்து அப்படி இருக்கும் போது மாத்தவா முடியும்???" விரக்தியாகப் பேசியவளைப் பார்த்து.

"முடியும் மாலினி, உன்னாலயோ, என்னாலயோ தனியா மாத்த முடியாது. ஆனா ரெண்டு பேரும் சேர்ந்து நின்னா மாத்த முடியும். எனக்கு நம்பிக்கை இருக்கு. என் பக்கத்தில நீ இருந்தா கண்டிப்பா என்னால முடியும். எனக்குத் தேவை உன்னிடம் இருந்து "யெஸ்"- கிற ஒரே ஒரு வார்த்தை தான்." இம்முறை உண்மையாகவே என் குரலில் நம்பிக்கை ஒலித்தது.

என் பக்கம் திரும்பிய மாலினி என்னைப் பார்த்தாள். "யெஸ் என்று சொல்லிவிடு மாலினி " - என்று என் கண்கள் அவளைக் கெஞ்சியது.

"அது அவ்வளோ ஈசி இல்லை த்யாகு. அதுவும் இல்லாம உனக்கு என்னை விட நல்ல பொண்ணு கிடைப்பா. யூ டிசெர்வ் எ பெட்டர் கேர்ள்" - என்று அழுது கொண்டே சொன்னாள்.

"மாலினி...I don't need a better girl, I just need you. யூ ஆர் தி, பெஸ்ட் கேர்ள் ஐ எவெர் குட் கெட்" - என்ற போது என் குரலும் தழுதழுத்தது.

அவள் அழுகை அதிகமானது. அதற்குப் பிறகு நான் எவ்வளவோ சொல்லியும், அவள் மனம் மாறவில்லை.எனக்கும் என்ன செய்வது என்றே புரியவில்லை. 5 நிமிட மௌனத்திற்குப் பிறகு,

"த்யாகு, நான் ரெண்டு வாரத்துல இந்தியா போறேன். ஜீலை -16 எனக்கு கல்யாணம். என்னை மறந்துட்டு நல்ல வாழ்க்கை அமைச்சுக்கோ, நான் கிளம்பறேன் " எங்கோ பார்த்து சொன்னாள்.

"இட்ஸ் ridiculous மாலினி. why the Hell are you worrying about me..Just go and get married to Mr. R.." சற்று கோபமாகவே சொன்னேன்.

ஒரு நிமிடம் என்னை உற்று நோக்கியவள் அழுது கொண்டே, "என்னைத் திட்டு உனக்கு அதுக்கான காரணம் இருக்கு, பட் என்னை "cheap" ஆ மட்டும் நினைச்சுடாதே ப்ளிஸ். வேற யார் நினைச்சாலும் தாங்கிப்பேன். ஆனா நீ அப்படி நினைச்சா அந்த நிமிசமே உயிரை விட்டிடுவேன் "

நான் சற்று நிதானமாகி, " மாலினி, மறுபடி யோசிச்சு முடிவெடு. இட்ஸ் நாட் டூ லேட். வீ வில் ஹேவ் எ வொண்டர்ஃபுல் ஃலைப்" என்றேன். பதில் ஏதும் கூறாமலேயே சென்றவளைப் பார்த்துக் கொண்டே நின்றேன்.

அதற்குப் பிறகு அடுத்த நாள் அவளை அலுவலகத்தில் பார்த்த போது அவள் என்னைப் பாராதவள் போல விலகிச் சென்றாள். எவ்வளவோ முயற்சி செய்தும் அவளிடம் பேசக் கூட முடியவில்லை, ஒவ்வொரு நாளும் என் ஃபோன் அடிக்கும் போது அது மாலினியிடம் இருந்து இருக்கக் கூடாதா என்ற எதிர்பார்ப்புடன் எடுத்து மீண்டும் மீண்டும் ஏமாந்து கொண்டு இருக்கிறேன்.ஒவ்வொரு முறையும் மெசெஜ் வரும் போதும்,

"என் வீட்டில் உன் வரவுக்காக 
நானும், என் வீட்டு மெழுகுவர்த்தியும்
உருகிக் கொண்டு இருக்கிறோம்"

என்று மாலினியிடம் இருந்து வந்திருக்கக் கூடாதா என்றெண்ணி ஏமாறுவது வாடிக்கை ஆகி விட்டது. 

மூன்றே நாள் மட்டும் பழகிய ஒரு பெண் எனக்குள் இப்படி ஒரு பாதிப்பு ஏற்படுத்துவாள் என நான் அறிந்திருக்கவில்லை. இன்னும் ஒரே வாரம் தான் என் மாலினி என்னை விட்டு தூரமாகச் சென்று இருப்பாள். அடுத்த சில நாட்களில் என் மாலினி வேறோருவனின் மாலினி ஆகி விடுவாள். நினைக்கும் போதே வலித்தது. ஆனாலும் ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கை, மாலினி எனக்காக மட்டுமே பிறந்தவள் என்று. என்றாவது ஒரு நாள் மனம் மாறி என்னைத் தேடி வருவாள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.. 

காத்திருக்கிறேன்காத்திருப்பேன் காத்திருப்பது தானே காதல்!!!

-காத்திருப்பு தொடரும் ஆனால் கதை முற்றும்.

பின் குறிப்பு :

இது என் உண்மைக் கதையா, கற்பனையா என நோண்டி நொங்கு எடுக்கும் நண்பர்களே, இதற்கு இரண்டு வரிகளில் பதில் சொல்ல விரும்புகிறேன்....

இது "அனைத்தும்" உண்மையா என்று கேட்டாள், இல்லை என்று பதில் அளிப்பேன்...
அப்படி என்றால் "எல்லாமே" டுபாக்கூரா என்றால், அதற்கும் இல்லை என்றே பதில் அளிப்பேன்...

12 கருத்துகள்:

FunScribbler சொன்னது…

// உண்மையாகவே எனக்கு அந்த நம்பிக்கை இல்லாவிடிலும் அவளுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்காக சொன்னேன்.//

யதார்த்தமான வரிகள்!!

FunScribbler சொன்னது…

வாவ் what a story man! i mean the way you wrote it, was absolutely fabulous. the last few paragraphs were too good!

//இது "அனைத்தும்" உண்மையா என்று கேட்டாள், இல்லை என்று பதில் அளிப்பேன்...
அப்படி என்றால் "எல்லாமே" டுபாக்கூரா என்றால், அதற்கும் இல்லை என்றே பதில் அளிப்பேன்...//

இது தான் director touch??

hahaha anyway awesome writing! keep going!!

FunScribbler சொன்னது…

anyway, saw ur comment on my blog! :)) thanks for your support and encouragement!! it is natural for readers to read but not comment. so that's perfectly fine, boss!!

just 2 suggestions:

1) change the backgrd colour of your blog (from black) to something else. it is quite glaring when we read with the black background!

2) try to add some pictures for your stories. It totally elevates your story to another level!

good work and keep rocking boss!

யுகேந்தர் சொன்னது…

யோவ், உன்னைய ரொம்ப ரொம்ப அசிங்கமா திட்டனும்தான் தோனுது.. :@

இது உங்க கதையா இருக்ககூடாது என நம்புகிறேன்... அவ்வளவுதான்..

தொடர்ந்து தமிழில் எழுதுங்க... வாழ்த்துக்கள்...

Unknown to myself சொன்னது…

//வாவ் what a story man! i mean the way you wrote it, was absolutely fabulous. the last few paragraphs were too good!//
நான் first first ஆ கொஞ்சம் தயக்கத்தோட எழுத ஆரமிச்ச கதை தான் இது. இந்த மாதிரி feedback கிடைச்சது ரொம்ப சந்தோசமா இருக்கு

//இது தான் director touch?? //
திடீர்னு சில சமயம் நமக்கு சில வரி தோணும்..அப்படியே மனசுக்குள்ள அது ஒட்டிக்கும்... அப்படிப் பட்ட வரி தான் இது..ஆனாலும் மனசுக்குள்ளே ஒரு ஓரமா கமல் இந்த மாதிரி லைன் ஐ எங்கேயோ யூஸ் பண்ணி இருக்காரோ, அதோட பாதிப்பு தானோனு ஒரு slight doubt um இருக்கு.

Unknown to myself சொன்னது…

// anyway, saw ur comment on my blog! :)) thanks for your support and encouragement!! it is natural for readers to read but not comment. so that's perfectly fine, boss!! //

புரிஞ்சிக்கிட்டதுக்கு ஒரு சின்ன நன்றி. என் கதைக்கு ஒரு comment ஐ பார்த்தப்ப வந்த சந்தோசத்தை நினைச்சப்ப தான், இதே சந்தோசத்தை எல்லாருக்கும் கொடுக்கணும்னு தோணுச்சு..இனி முடிஞ்ச வரைக்கும் அதை follow பண்ணுவேன்.

your suggestions are noted, will follow it soon :)

Unknown to myself சொன்னது…

// யோவ், உன்னைய ரொம்ப ரொம்ப அசிங்கமா திட்டனும்தான் தோனுது.. :@ //

என்ன தான் இருந்தாலும் வயசுல பெரியவனை, இப்படியா பப்ளிக் ல திட்டறது...எதுவா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம் :)

//தொடர்ந்து தமிழில் எழுதுங்க... வாழ்த்துக்கள்...//
கண்டிப்பா இனி நிறைய எழுதுவேன். ஒவ்வொரு post உம் படிச்சு உற்சாகம் கொடுத்து comments போட்டதுக்கு ரொம்ப நன்றி :)

Ganesh Poomal Girirajan சொன்னது…

Good Story! உரையாடல்களில் இயல்பான நகைச்சுவை! எதார்த்தம் மீரா இனிமையான பல செறிவான வரிகள் ! Keep writing da!

Ganesh Poomal Girirajan சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
யுகேந்தர் சொன்னது…

நான் உங்களை திட்டினதற்கு ஒரே காரணம், நீங்கள் என் வாழ்வின் சில (பழைய) நிகழ்வுகளை ஞாயபகபடுத்திவிட்டீர் என்ற கோபம் தான்..

யுகேந்தர் சொன்னது…

//இது "அனைத்தும்" உண்மையா என்று கேட்டாள், இல்லை என்று பதில் அளிப்பேன்...
அப்படி என்றால் "எல்லாமே" டுபாக்கூரா என்றால், அதற்கும் இல்லை என்றே பதில் அளிப்பேன்...//

இதில் நடந்தவை சில உண்மையாக இருந்திருக்க வேண்டும்.. சில இப்படி நடந்தால் நன்றாக இருந்திருக்குமே, நான்/மாலினி இப்படி செய்திருக்கலாமே என்று நீங்கள் நினைத்திருக்க கூடும்.


//
இனி வரும் காலங்களில் எனது ஏதேனும் ஒரு (ஜிமெயில் அல்ல வேறேதுனும்) கணக்கில் இருந்து கருத்து பதிவு செய்கிறேன்.

Unknown to myself சொன்னது…

//Good Story! உரையாடல்களில் இயல்பான நகைச்சுவை! //

thanks poomal...

//Keep writing da!//

sure, you keep reading too! :)