வெள்ளி, 8 ஜூன், 2012

சாகும் வரை வேண்டுமடி!!!

இது 2004 ஆம் ஆண்டு இறுதியில் எழுதப்பட்ட கவிதை, முகம் தெரியாப் பெண்ணின் நட்பு எழுதத் தூண்டியது. இக்கவிதைக்கு பிறகு அவளின் தரிசனம் கிடைத்தது ஆனால் நிரந்தரமாக அல்ல. அவள் மட்டுமே படித்திருந்த கவிதை, அனைவரின் பார்வைக்காக...

காலை நேரப் பனித்துளியே
மாலை நேர மலரின் மணமே
சாலையோர மர நிழலே
எனைத் தழுவிய பூங்காற்றே
இவை ,
உணரத்தான் முடியுமடி
உருவம் தான் இல்லையடி!!!
நீ
உருவத்தை மறைத்து வைத்து
உணர்வாலே தீண்டியவள்..
வண்ணமிகு தேர் பூட்டி
வானவில்லை சிறகாக்கி
வளையோசை சத்தமிட
கனவுலகில் எனைக்
காண வந்த காரிகையே!
சின்ன சின்ன சிரிப்பினிலே
எனை சிதறடித்துச் 
சென்று விட்டாய்.
சன்னமான பார்வையிலே
எனை சாகடித்துச்
சென்று விட்டாய்!!!
சாகும் வரை வேண்டுமடி
பாவை உந்தன் தரிசனமே...

3 கருத்துகள்:

யுகேந்தர் சொன்னது…

அப்பவே கவிதையெல்லாம் பொலந்திருக்கீங்க... இத்தனை வருடமா ஏன் எழுதாமா அமைதியா இருந்திங்க..

மீராதான் மீண்டும் எழுத வைத்து விட்டார்களா ? #seriousQuestion

யுகேந்தர் சொன்னது…

மீரா அல்ல் , மாலினி என படிக்கவும்

Unknown to myself சொன்னது…

//மீரா அல்ல் , மாலினி என படிக்கவும்//

தம்பி நீ மீரா மீரானு உருகறதப் பார்க்கும் போது எனக்கு உன்மேல slight a doubt வருது...