வெள்ளி, 8 ஜூன், 2012

காத்திருப்பது தானே காதல் - பாகம் 5

பாகம் -1பாகம் - 2 ,பாகம் -3பாகம் - 4,பாகம் - 6

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எனது முகத்தில் இருந்த ஏமாற்றத்தை மறைக்க ஒவ்வொரு நொடி முயன்றும் தோற்றுக் கொண்டு இருந்தேன். நல்ல வேளையாக பில் வந்து அந்த அசாதாரணமான அமைதி நிலையைக் கலைத்தது  செட்டில் செய்து விட்டு, வெளியே நடக்க ஆரம்பித்தோம். நாங்கள் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. 

எனக்கும் என் மனசாட்சிக்கும் இடையே ஒரு யுத்தமே நடந்து கொண்டிருந்தது.

நான் - " மாலினி என்னிடம் அவளுக்கு எங்கேஜ்ட் ஆயிருச்சினு சொல்லி இருந்தா இப்படி தேவை இல்லாமல் இது வரை வந்து இருக்காது"

மனசாட்சி - " டேய், நீ அவளை தப்பு சொல்லாதே, அவளிடம் நீ டேட்டிங்னா கூப்பிட்ட, உடனே இல்லை எனக்கு நிச்சயம் ஆயிடுச்சினு சொல்ல..கிடைச்ச கேப்ல கிடாய் வெட்டப் பார்த்த, இப்ப அனுபவி.. அவள் ஒரு நட்போட உன்னை மறுபடி அவமானப் படுத்த வேண்டாம்னு வந்திருக்கலாம் "

நான் - " அது சரி, அப்படி வந்தவ என்றால் எதுக்கு இவ்வளவு சிரத்தை எடுத்து, ஆடை, மேக்- அப் எல்லாம்"

மனசாட்சி - "உன்னை மாதிரி பையங்க  தான் பிச்சைக்காரன் மாதிரி வெளியே போவீங்க. அவ பொண்ணு டா..நாச்சுரலாவே அவங்க இப்படித்தான் தன்னை அழகாக் காட்ட கொஞ்சம் எக்ஸ்ட்ரா எஃபக்ட் போடுவாங்க. உன்னோட மட்டும் இல்லை, அவ தாத்தாவோட வெளியே போனாலும் இப்படித்தான் வந்திருப்பா"

நான் - " அது சரி, , நீ என்னைக்குமே சேலைக் கட்சி தானே, வேட்டிக் கட்சியை எப்படி சப்போர்ட் பண்ணுவே? அவளுக்குத் தானே சப்போர்ட் பண்ணுவ"

மனசாட்சி - " ஹி ஹிநம்ம சண்டைய அப்புறம் வைச்சுக்கலாம், உன்னைப் பத்தி மட்டுமே, சுய நலமாய் யோசிக்காம, அவளோட நிலைமையையும் யோசி "

எனக்கும் அது சரி என்று படவே, மாலினியிடம்

"கங்கிராட்ஸ் மாலினி" - என் முகத்தில் ஒரு செயற்கை சிரிப்பை வரவழைத்துக் கொண்டு சொன்னேன்.

அவள் "சந்தோசமான விசயத்துக்கு தான் அதெல்லாம் சொல்லணும் த்யாகு, இது எனக்குப் பிடிக்காம என்னோட முழு சம்மதம் இல்லாம நடந்த விசயம் " அவளே தொடர்ந்து சொல்லட்டும் என்று கவனிக்க ஆரம்பித்தேன்.

"அவன் வேற யாரும் இல்லை, என் அக்கா புருசனோட தம்பி தான். எந்த வேலை வெட்டியும் இல்லாம சுத்திட்டு இருக்கான். அவனை எனக்கு சுத்தமாப் பிடிக்காது. கால் கட்டு போட்டா சரியாயிடும்னு வெட்டியா இருந்த பெரிசு ஒண்ணு சொல்ல என் தலையில கட்டி வைக்கப் பார்க்கறாங்க" - சலிப்பும் வேதனையும் கலந்த குரலில் சொன்னாள்.

"உன் பேரண்ட்ஸ் எப்படி ஒத்துக்கிட்டாங்க" - புரியாமல் கேட்டேன்.

"அது ஏன் கேட்கறே? என் அப்பாவுக்கு ஜாதகத்துல நம்பிக்கை நிறைய, என் ராசி ல ஏதோ குறை இருக்காம், எல்லா ஜாதகத்தோடயும் அவ்வளவு சீக்கிரம் பொருந்தாது.ஒரு குறை இருக்கிற பையனோடு தான் கல்யாணம் பண்ணனும்னு ஜோசியர் சொல்லி இருந்தாரு. அந்த டைம்ல இந்த ப்ரொபோசல் உம் வர ஜாதகப் பொருத்தம் நல்லா இருக்குனு எங்க யாரையும் கேட்காம சரீனு வாக்கு கொடுத்துட்டாரு. எங்க வீட்டுல அப்பா சொன்னதுக்கு அப்புறம் மறு பேச்சு எதுவும் இல்லை" - அவள் சொல்ல சொல்ல இப்படியும் இந்த காலத்தில் இன்னமும் நடந்து கொண்டிருக்கிறதா என்று ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தேன். அவளே தொடர்ந்தால்.

"அன்னைக்கு நீ ஆஸ்டா ல என்னைப் பார்த்தப்ப , என் அம்மாட்ட தான் சண்டைப் போட்டுட்டு இருந்தேன். அப்பா என் அம்மாட்ட, "அவ கல்யாணத்துக்கு சம்மதிச்சா வீட்டுக்கு வர சொல்லு, இல்லைனா எனக்கு ஒரு பொண்ணு இல்லைனு நினைச்சுக்கிறேன்"  சொல்லிட்டு போயிட்டாரு" பாவம் அம்மாவாலயும் எதையும் செய்ய முடியலை. அதனால தான் அழுதுட்டு இருந்தேன்." - அவள் கண்கள் மீண்டும் கலங்க ஆரம்பித்தது.

எனக்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்தது. வெளியில் தான் பேருக்கு மாடர்ன் ஆக சந்தோசமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறாள். ஆனால் உள்ளே தன்னால் அப்பாவின் வார்த்தையையும் மீற முடியாமல், அந்த வாழ்க்கையையும் ஏற்றுக்
கொள்ள இயலாமல் இரு தலைக் கொள்ளி எறும்பு போல வாழ்ந்து கொண்டிருக்கிறாள்..

அவளது அருகே சென்று, அவளது முகத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டு "கவலைப் படாதே மாலினி, உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும்" என்றேன்.

ஆறுதலுக்காக ஏங்கிக் கொண்டு இருந்த அவள் அப்படியே என் தோளில் சாய்ந்து கொள்ள, என் ஒரு கையால் அவளது தோளை அணைத்துக் கொண்டு, மறுகையால் அவளது கையைப் பற்றிக் கொண்டேன். அவளது கண்களைப் பார்தேன், அவளுக்கும் பிடித்திருக்கிறது என்பதிற்கு சம்மதமாக என் கை விரல்களினுள் அவளது விரல்களை நுழைத்து இறுகப் பற்றினாள். 

முதல் டச்சிங் டச்சிங் உடலுக்குள்ளேயும் மனதிற்குள்ளேயும் ஒரு விதமான இன்பச் சூட்டினைப் பரப்பியது.

அப்படியே நடக்க ஆரம்பித்தோம். திடீரென ஏதோ தோன்றியவளாக,

"உனக்கு கேர்ள் ப்ரண்ட் யாராச்சும்??" - ஒரு எதிர்பார்ப்புடன் கேட்டாள்.

"இருந்தா, ஆனா இப்ப இல்லை" - என்றேன்.

"ஓ சாரி ஃபார் யுவர் லாஸ்" - என்றாள்.அப்போது தான் நான் சொன்னதை வேற விதமாக அவள் புரிந்து கொண்டதைப் புரிந்து

"ஹே, நீ நினைக்கிற மாதிரி இல்லை.இன்னும் உயிரோட தான் இருக்கா, ஆனா இன்னொருத்தன் பொண்டாட்டியா" - என்றேன் சிரித்துக் கொண்டே

"உன்னை மாதிரி ஒருத்தனை விட்டுட்டு வேற ஒருத்தனோட எப்படி? அவ ரொம்ப அன் லக்கியா இருக்கணும் " என்றாள் கொஞ்சம் சோகமாக

"நத்திங் லைக் தட், அவ என்னோட இருந்ததை விட இப்ப பெட்டர் லைஃப் வாழ்ந்திட்டு இருக்கா..அதே மாதிரி நான் ஒண்ணும் நீ நினைக்கிற மாதிரி நல்லவன் எல்லாம் இல்லை. ஐ ஹேட் ஃபன் வித் அதர் கேர்ள்ஸ் டூ " - என்றேன்.

"நீ நல்லவனா, கெட்டவனானு எனக்குத் தெரியாது, ஆனா யூ ஆர் சோ யுனிக் த்யாகு. உனக்கு வைஃப்பா வரப் போறவ ரொம்ப லக்கி " என்றாள்.அந்த கடைசி வாக்கியத்தைச் சொன்ன போது, அவள் குரலில் இருந்தது பொறாமையா ஏக்கமா என்று தெரியவில்லை.

ஒரு நொடி மூச்சை உள் நோக்கி இழுத்து விட்டு  "நீ ஏன் அந்த லக்கி கேர்ள் ஆ இருக்கக் கூடாது மாலினி? ' - மனதில் தோன்றியதை மறைக்காமல் கேட்டு விட்டேன்.

என் அணைப்பில் இருந்து  விடுபட்டவள்,  "அது அவ்வளவு ஈசி இல்லை த்யாகு, அதுவும் இல்லாம நான் ரொம்ப நாள் கழிச்சு சந்தோசமா இருக்கேன். இப்போ இதைப் பத்தி பேசி அதை இழக்க வேணாமே ப்ளீஸ் " 

அப்போது அவளது வீடு வர, அவள் சொன்னதில் இருந்த நியாயம் உணர்ந்து,

"சரி மாலினி, நல்லா தூங்கு, நாளை கால் பண்றேன்" என்று குட் நைட் ஹக்( Hug) செய்ய அவளை நோக்கி என் உடலை நகர்த்தினேன்.

அவளும் "தேங்ஸ் பார் தி, வொன்டர்ஃபுல் ஈவினிங் த்யாகு, இது என் வாழ்க்கைல மறக்கவே முடியாத ஈவ்னிங்" - என்று அணைத்தாள்.

அவள் காரணமா, நான் காரணமா என்று இருவருக்குமே தெரியவில்லை.எப்போது நடந்தது, எப்படி நடந்தது என்றும் தெரியவில்லை.அதை ஆராய்வதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் அடுத்த  நொடி எங்களது உதடுகள் இணைந்திருந்தன.


இருவரது உதடுகளும் இணைந்த அந்த நொடியில் உலகம் சுற்றுவது அப்படியே நின்றது போலத் தோன்றியது. எவ்வளவு நேரம் இருவரும் அப்படியே இருந்தோம் என்று தெரியவில்லை. திடீரென, லிப்ட் திறக்கும் சத்தம் கேட்க, தனது நிலையை உணர்ந்து சராலென என்னிடம் இருந்து அவசரமாக மாலினி விலகினாள். 

ஏதோ சொல்ல வாயைத் திறந்த என்னைப் பார்த்து, 

"நோ த்யாகு, சந்தோசமா ஆரம்பித்த நாள், சந்தோசமாவே முடியட்டும். நாளைக்கு பார்க் ல 7 மணிக்குப் பார்ப்போம் " -வீட்டுக்குள் சென்று மறைந்தாள்.சந்தோசமான நினைவுகளுடன் நானும் வீடு சென்று தூங்கினேன்.

- அடுத்த பாகத்தில் முடிவடையும்.

2 கருத்துகள்:

FunScribbler சொன்னது…

//அவ தாத்தாவோட வெளியே போனாலும் இப்படித்தான் வந்திருப்பா"//

hahahahahahahaha!!

Gokul சொன்னது…

உன்னோட மட்டும் இல்லை, அவ தாத்தாவோட வெளியே போனாலும் இப்படித்தான் வந்திருப்பா" ..idhu thaan punch :)