ஞாயிறு, 10 ஜூன், 2012

ஏன் சார் எனக்கு மட்டும் இப்படி எல்லாம்???


இடம் : Preston பஸ் ஸ்டாண்ட்
நேரம் : 10:00 PM

10:40 க்கு லண்டன் செல்லும் பஸ் காக wait பண்ணிக் கொண்டு இருந்தேன். 

"இந்தியால பஸ் கிளம்புனதுக்கு அப்புறம், அடிச்சு பிடிச்சு, ஆட்டோ பிடிச்சு, ஓடற பஸ்ஸை ஓவர் டேக் பண்ணி, driver வாயாலே நாலு கெட்ட வார்த்தை திட்டு வாங்கி எப்பவும் ஊருக்கு போற நாயி, UK la 40 minutes முன்னாடியே போய் scene போடுறீயா??. கடுப்பேத்தறார் மை லார்ட்" னு உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கு நல்லாவே கேக்குது.

இதுக்கு முன்னாடி 2-3 தடவை train la லண்டன் போய் இருந்தாலும், bus la போறது இது தான் முதல் தடவை. அதுவும் இல்லாம இந்த ஊர்ல நம்மூரு மாதிரி அன்பான ஆட்டோ கார அண்ணன்களோ, நம்ம தலைவர் சூப்பர் ஸ்டார் போட்டோ வைச்சிருக்கிற ஒரே காரணத்தால பஸ்ஸை விட express speed ல ஓடற ஆட்டோவோ  இல்லை. அதனால தான் எதுக்கு ரிஸ்க்-னு கொஞ்ச நேரத்துலயே வந்துட்டேன். 

என்னையும் சேர்த்து பஸ் ஸ்டாண்ட்ல நாலே நாலு பேரு தான் இருந்தாங்க. அதிலே ஒரு ஜோடிப் புறா வேற!. ஒரு புறா ஊருக்குப் போக இன்னொரு புறா வழியனுப்ப வந்திருக்கு. 

நொடிக்கு ஒரு தரம், "I am going to Miss you Darling" சொல்லிட்டு ஒரு பேச்சிலர் பையன் இருக்காங்கற ஒரு இங்கிதம் கூட இல்லாம "பச்சக் பச்சக்" குடுத்துட்டே இருந்தாங்க. அந்தப் பையனுக்கு என் வயது கூட இருக்காது, ஆனா என்னமா பர்ஃபார்மென்ஸ் பண்றான் பய புள்ள!!!. நான்  அப்படியே "ஆஆவ்னு" வாயைத் திறந்து பார்த்துட்டு இருந்தேன். 

அதோட நிறுத்தாம அவன் கையை, சே சே கண்ட கண்ட இடத்தில எல்லாம் வைச்சிட்டு"இங்கேயே எல்லாமும் பண்ணிட்டா அப்போ வீட்டுல என்ன தாண்டா பண்ணுவீங்க" மௌனம் பேசியதே டயலாக் தான் நியாபகம் வந்துச்சு.

"செரி, இதைப் பார்த்துட்டு இருந்தா நமக்கு stomach burning தான் அதிகம் ஆகும்னு" அப்படியே வேற பக்கம் திரும்பி பார்த்தா, 

ஒரு தாத்தா "இது எல்லாம் சப்பை மேட்டர், என் வயசில இதை விட நான் சூப்பர் சூப்பர் மேட்டர் எல்லாம் பப்ளிக் ல பண்ணி இருக்கேன் தெரியுமா??" கிற மாதிரி ஒரு தெனாவெட்டு லுக் விட்டுட்டு அவரோட வேலையப் பார்க்க ஆரமிச்சாரு.

 "சரி, நமக்குத் தான் ஆண்டவன் கையைக் கொடுத்திருக்கானே, அதை வெட்டியா வைச்சுட்டு என்ன பண்ணனு" நினைச்சு பாக்கெட்க்கு உள்ளே அப்படியே கையை விட்டு மொபைலை எடுத்தேன்.  Facebook, gtalk ல அப்படியே நண்பர்களோட அரட்டை அடிச்சிட்டு time pass பண்ணிட்டு இருந்தேன்.

"மணி 10:20 ஆச்சே, இன்னும் பஸ் வரலையே, நாம correct ஆன place la தான் இருக்கோமானு" ஒரு சின்ன doubt.

 அப்ப தான் அந்த தாத்தா "Hey Young man " -னு கூப்பிட்டாரு. அட என்னைத் தாங்க!

"I forgot my reading glass today, can you help me to find out what time is the next bus to Blackpool" -னு பாவமாக் கேட்டாரு. "அதனால என்ன தாத்தா, நான் பார்த்து சொல்றேனு" பாசமா சொல்லிட்டு."Next bus is at 11 "-னு சொன்னேன்.

அதுக்கு அந்த தாத்தா, "யாரு பெத்த பிள்ளையோ நீ நல்லா இருப்ப ராசா, இந்தியக் காரங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்கயா!!! " ஏதோ நான் அவருக்கு என் சொத்தையே எழுதி வைச்ச range ku பாராட்டித் தள்ளிட்டாரு. 

அப்போ தான் நான் நினைச்சேன்"சே நம்மளால இந்தியா பெருமை எங்கேயோ போயிடிச்சு, நாளைக்கு எவனாச்சும் நாட்டுக்காக என்னடா பண்ணுனே, வெளி நாடு போய் உன் பாங்க் அக்கவுண்ட் பேலன்ஸ் தானே ஏத்துனேனு??"  கேட்டா, பெருமையா சொல்வேன், "பாங்க் பேலன்ஸ் மட்டும் இல்லடா நம்ம நாட்டோட பெருமையும் சேர்த்து தான் உயர்த்திட்டு வந்திருக்கேன்" என்று. 

மணி 10:30 ஆச்சு, அப்போ வெள்ளைக் கலர்ல "லண்டன்"-னு பேரு போட்டுட்டு ஒரு பஸ் வந்து நின்னுச்சு. டிப் டாப் ஆ பில் கேட்ஸ் Range ku கோட் சூட் லாம் போட்டுட்டு ஒருத்தன் இறங்கினான். கேட்டா அவன் தான் அந்த பஸ் டிரைவர் ஆம். என்ன கொடுமை சரவணன் இது!!! 

"சரி அவன் என்ன டிரஸ் போட்டிருந்தா நமக்கு என்ன? உருப்படியா வண்டியை ஓட்டுனா போதும்னு" நினைச்சிட்டு, அப்படியே Queue la போய் ஐக்கியம் ஆனேன். அந்த ஜோடிப் புறா அலும்பு இன்னும் அதிகம் ஆயிடிச்சு.

"Baby, take care da. நேரா நேரத்துக்கு Fridge la இருக்கிற பீர் ஐ குடிச்சு காலி பண்ணிடு. club la எவளாச்சும் பார்த்தா எஞ்சாய் பண்ணு, ஆனா வீட்டுக்கு லாம் கூட்டிட்டு போகாதே" கிற Range கு அந்த பொண்ணு அட்வைஸ் பண்ண..அந்த பையன் மறுபடியும் அவ வாயை லபக்-னு கவ்வி பர்ஃபார்மென்ஸ் காமிக்க ஆரமிச்சுட்டான்.

 "சரி போனா போகட்டும், இன்னும் 5 நிமிசத்துல இவன் தொல்லை முடிஞ்சிடும், இனி பஸ்ல ஏறி லண்டன் போற வரைக்கும் நிம்மதினு" நானும் பெருந்தன்மையா அவனை மன்னிச்சு விட்டுட்டேன்.

மணி 10:35, பஸ்ல ஏறலாம்னு ஸ்டெப் ல கால் எடுத்து வைக்கும் போது, உடம்புக்குள்ள ஒரு அலாரம் அடிச்சது. 

"ஆகா டேங்க் ஐ காலி பண்ண மறந்துட்டமேனு" அப்ப தான் நியாபகம் வந்துச்சு. 

அது என்னவோ தெரியலைங்க பஸ் ல travel பண்ணும் போது மட்டும், correct a பஸ் ஏறற நேரமா பார்த்து தான் இந்த அலாரம் அடிக்க ஆரம்பிக்கும். "இந்தியால தான் இந்தப் பிரச்சனைனு நினைச்சா, இங்கேயுமா? ". என்ன பண்ணலாம்னு ஒரு நிமிசம் யோசிச்சேன்.

 "6 மணி நேர பயணம். தாங்காது ராசா, நம்ம ஊரு மாதிரி புரோட்டா கடை பார்த்துலாம் நிறுத்த மாட்டான். நீயே யோசிக்கோ " என் மைண்ட் வாய்ஸ் சொல்றது தான் correct-னு தோணிச்சு.

"அண்ணே ஒரே நிமிசம்னு" டிரைவர் அண்ணனைப் பார்த்து சொல்லிட்டு, பிடிச்சேன் பாருங்க ஒரு ஒட்டம். 

ஓடற வேகத்தைப் பார்த்து, "பையன் ஒரு வேளை ஒலிம்பிக்ஸ் காக practice பண்றானோனு" அந்த ஜோடிப் புறா கூட அவங்க ரொமான்ஸ் ஐ நிறுத்தி வைச்சுட்டு என்னைப் பார்க்க ஆரமிச்சுதுங்க. அப்படியே போய், ரெஸ்ட் ரூம்ல நின்னா, "அப்பப்பா அந்த சுகத்தை லாம் சொல்ல முடியாது, அனுபவிச்சா தான் தெரியும்". 

ஒரு வேளையா வந்த வேலையை முடிச்சிட்டு, திரும்பி வந்த வேகத்துலயே ஓடிப் போனா நம்ம டிரைவர் அண்ணன் வண்டியைக் கிளப்பிட்டாரு. 

"ஸ்டாப்ப்ப்ப்ப்ப்ப்ப்" - அப்படியே கத்திட்டே போய் அவரு வண்டிக்கு குறுக்கா நிக்க, ஒரு சடன் ப்ரேக் போட்டு நிறுத்தினாரு.

 "டேய் பேமானி, உனக்கு சாவறதுக்கு வேற வண்டி எதுவும் கிடைக்கலையானு " அவர் லாங்க்வேஜ் ல திட்டிட்டே கதவைத் திறந்தாரு.

பஸ்ல ஏறி "அண்ணா மன்னிச்சுக்கோனா, ஏதோ சின்ன பையனு" ஆயிரம் தடவை சாரி கேட்டுட்டு. "எந்த ஊர்ல போனாலும் டிரைவர்ட கெட்ட வார்த்தைல திட்டு வாங்காம பஸ் ஏறினதே இல்லை இந்த தியாகராஜன்" -னு விஜயகாந்த் range ku ஒரு பஞ்ச் டயலாக் பேசிட்டு" சீட்ல போய் உட்கார்ந்தேன். 

அப்படியே ஏசிக் காத்து சிலு சிலுனு வீச, டேங்க் காலி பண்ணதால மனசில இருந்த உற்சாகம் வேற.."இனி நிம்மதியா தூங்கலாம் டா சாமி" நினைச்சிட்டு இருக்கும் போதே.

"Welcome to National Express. Service 421 to London..Blah blah blah.Wash rooms can be located at the rear of the bus" டிரைவர் அண்ணன் announce பண்ண

அப்படியே தலை சுத்த ஆரம்பிச்சது "என்னது, பஸ்-லயே ரெஸ்ட் ரூமா???" ஏன் சார் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது??? "

-ஒரு வழிப் பயணம் நிறைவுற்றது.

லண்டனிலிருந்து திரும்ப வந்த பயண அனுபவம்..மச்சி அவ உன்னைப் பார்க்கறாடா!!!

2 கருத்துகள்:

யுகேந்தர் சொன்னது…

உங்ககிட்ட இருந்து இன்னும் இன்னும் நிறைய நான் எதிர்ப்பார்க்கிறேன் தல.... ஆனா உங்க நகைச்சுவை உணர்வு இருக்கே.. சூப்பர்... காலரை தூக்கிட்டு GCT'da னு சொல்லிக்குறேனா பாருங்க...

அடுத்த லண்டனில் கால் டாக்ஸி அனுபவம், லண்டனில் இரயில் அனுபவம் என இன்னும் பல தொடர் வாசகராகிய எங்களுக்கு வேண்டும்...

எங்களுக்கும் லண்டனில் என்ன நடக்குதுனு தெரியும்ல.. ஓசி’ல ஊரை சுற்றி பார்த்து போல ஆச்சு...

அம்பேரிக்கா அனுபவமும் பிற்காலத்தில் நேரம் கிடைக்கும் போது எழுதுங்க... உங்களுக்கு ஒரு மலரும் நினைவா இருக்கும்... நாங்களுக்கு அம்பேரிக்கா’வ உங்க எழுத்து மூலமா பார்த்த மாதிரியும் இருக்கும்...

Unknown to myself சொன்னது…

யுகேந்தர், கண்டிப்பா அய்யா தயவு செஞ்சு விட்டுடுங்க என்னால தாங்க முடியலைனு நீ சொல்ற வரைக்கும் எழுதறேன் :)