வியாழன், 28 ஜூன், 2012

அண்ணா சாலை ஆக்சிடெண்ட் கற்றுத் தந்த பாடம் என்ன?


நேற்று சென்னையில் ஜெமினி மேம்பாலத்தில் நடந்த பஸ் விபத்தைப் பற்றி நீங்கள் இன்னமும் அறியாமல் இருந்தால் உங்களுக்கு பேஸ்புக்கில் அக்கௌன்ட் இல்லை என்று அடித்து சொல்லி விடலாம். 

நேற்று ஒவ்வொரு தமிழனும் சாப்பிட மறந்தாலும் இந்த விஷயத்தை ஷேர் செய்தோ அல்லது லைக் செய்தோ "ஓட்டுனரின் கவன குறைவே காரணம்" என்றோ , " தரமற்ற பேருந்துகளை கொடுத்த அரசே இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்" என்றோ , "அச்சச்சோ எவ்ளோ பேருக்கு அடி பட்டுச்சு? " என்றோ தங்களது கோபங்களையும், பரிதாபங்களையும் பதிவு செய்து தங்களுக்கும் சமுக நலனில் அக்கறை உள்ளது என்று தெரிவித்துக்  கொண்டதை பார்க்க முடிந்தது.

இந்த விபத்துக்கு காரணமாக பல காரணங்கள் சொல்லப் படுகின்றன. அதை
அலசி ஆராய்வது அல்ல இப்பதிவின் நோக்கம். முக்கியமான காரணமாக கூறப்படுவது "டிரைவர் செல்போன் பேசிக் கொண்டு வண்டியை ஓட்டியதால் ஏற்பட்ட கவனக் குறைவே" என்பதே. இதில் எவ்வளவு உண்மைகள் இருக்கிறது என்பதை அப்பேருந்தில் பயணித்த சிலரோ அல்லது டிரைவரோ வாக்குமுலம் அளிக்கும் போது தான் தெரிய வரும். ஆனால் இது காரணமாக இருக்க நிறைய வாய்ப்புகள் இருப்பதாகவே இதுவரை வெளி வந்துள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நேரத்தில் இதைப் பார்த்து கொந்தளித்து "மாநகர பேருந்து டிரைவர்கள் பணிக்கு செல்லும் போது செல்போன் கொண்டு செல்வதை தடை செய்ய வேண்டும். மீறினால் மிகப் பெரிய தண்டனை அளிக்க வேண்டும்" என்று நிறைய சமூக ஆர்வலர்கள் போர்க் கொடி உயர்த்துவது சந்தோஷமான விஷயம் என்றாலும் அதை அவர்கள் தங்களது வாழ்கையில் தங்களது சொந்த வாகனத்தில் பயணிக்கும் போது பின் பற்றுகிறார்களா? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. அத்தகையவர்களை விமர்சினம் செய்யும் எண்ணமும் இப்பதிவிற்கு இல்லை.இதற்கான பதிலை அவர்களே அவர்கள் மனசாட்சியிடம் பதில் அளித்துக் கொள்ளட்டும்.

ஆனால் ஒன்று நிச்சயம் செல்போன்  பேசிக்  கொண்டு  வாகனம்  ஓட்டும் அனைவருக்கும் இது ஒரு சவுக்கடி. ஒரு நொடியேனும் அவர்களைக் குற்ற உணர்வு தாக்கி மறுநிமிடமே மறந்தும் இருக்கலாம். ஆனால் இதன் பாதிப்பால் திருந்துபவர்  யார் என்று  யோசித்தால் அந்த  டிரைவரும் அவர்களின்  குடும்பமும்  மட்டுமே என்பது தான் நிதர்சன உண்மை.அதற்காக   அவர்கள் கொடுத்த விலை தான் அதிகம்.

இவ்விபத்து நடந்த சில நிமிடங்களியே, தனது டூ வீலரை ஒட்டியபடி "மச்சான் 17M டிரைவர் செல்போன் பேசிட்டு பிரிட்ஜ்ல விட்டுட்டனாமே?" என்று செல்போனில் கதைத்த படி செல்லும் இளம் வயதினரையும்....
"சொல்லு செல்லம்...வீட்டுக்கு வரும் போது மறக்காம வாங்கிட்டு வந்திடறேன்" என்று செல்போனைப் பாக்கெட்டில் வைத்தவாறே திரும்பி தனது கஸ்டமரிடம் "நீங்க சொல்றது கரெக்ட் சார், அந்த பஸ் டிரைவர் ஐ லாம் வேலையை விட்டே தூக்கிடனும்" என்று சொல்லும் ஆட்டோ டிரைவர்களையும் பார்த்து கொண்டே தான் இருக்க போகிறோம் என்னும் போது மனம் வலிக்கிறது. அவர்களை சாடுவதற்காக எழுதிய பதிவும் இல்லை இது!

அப்போ இந்தப் பதிவிற்கு என்ன தான் காரணம் என்று பொறுமை இழந்து கேட்டும் நண்பர்களே. நான் சில நாட்களுக்கு முன் செல்போனால் விபத்தில் முடிவதைப்  பற்றிய ஒரு வீடியோ பார்த்தேன். அன்று முதல் செல்போனை டிரைவர் சீட்-இல் இருக்கும் போது தொடுவதே இல்லை. அந்த அளவிற்கு என்னை பாதித்த வீடியோவை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கொஞ்சம் கொடுரமான வீடியோ அதனால் viewers discretion is recommended.


இந்த பதிவைப் பார்க்கும் என் நண்பர்களில் ஒருவரேனும் இனி வண்டி ஓட்டும் போது செல்போனை தொடுவதில்லை என்று முடிவெடுத்தால் அதை விட சந்தோசம் எனக்கு வேறு எதுவும் இருக்காது. என் சந்தோசத்திற்கான சுயநலமே இப்பதிவின் நோக்கம்!

திங்கள், 25 ஜூன், 2012

யாருக்கு யாரோ!!! - பாகம் 4.



பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் -5பாகம் - 6

அன்று இரவு, வீட்டில் அமர்ந்திருந்த போது, மதன் என்னிடம் சொல்லிய வார்த்தைகள் மீண்டும் மீண்டும் நினைவிற்கு வந்து என்னை இம்சித்தது. 

"நான் செய்வது மிகத் தவறோ? அவன் சொல்வது போல உஷாவை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறேனோ? ஜென்னியைப் பற்றி உஷாவிடம் சொல்லும் தருணம் வந்து விட்டதோ??? " - என மனதிற்குள் ஆயிரம் ஆயிரம் கேள்விகள். 

அனைத்துக் கேள்விகளுக்கும் விடை தெரிந்திருந்தாலும்,இதை உஷாவிடம் சொன்னால் ஏற்படும் விளைவுகளை நினைக்கும் போது அவளிடம் இதைப் பற்றி பேசுவதற்கு இது சரியான தருணமா என்ற கேள்வி எழுந்து என்னை மேலும் குழப்பியது. யோசிக்க யோசிக்க குழப்பங்கள் தான் அதிகமானதே தவிர, அதற்கான சரியான விடை கிடைக்கவில்லை.

எப்போதும் போல மனதின் அமைதியைத் தொலைத்தால் என்ன செய்வேனோ அதையே இன்றும் செய்தேன். எனது கணினியில் என் ப்ரைவேட் ப்ளாஃக் ஒபன் பண்ணினேன். 

நான் ஜென்னியின் இருக்கையை நோக்கி சென்று கொண்டு இருந்தேன். தூரத்திலே எனை பார்த்ததும், கையை அசைத்து  

"ஹாய்" என்றாள். 

அவள் இருக்கைக்கு அருகே சென்று அவளது மேசையில் அமர்ந்தவாறே,  

"ஹாய், வேலை எப்படி போய்ட்டு இருக்கு? " என்று கேட்டேன். அவள் என்னை ஒரு பார்வை பார்த்து விட்டு, 

"நல்ல வேலை யாரும் என்னோட கையை இங்கே பிடிச்சு வைக்கவில்லை, அதனால் வேலை நல்லாவே போகுது" என்று புன்னகையுடன் பதில் அளித்தாள். 

எங்களது முதல் சந்திப்பு என் மனத் திரையில் ஒருமுறை வந்து போக  "இன்னும் அதை நீ மறக்கவில்லையா, அதுதான் அப்பவே சாரி சொன்னேனே! எனி ஹஃவ் மறுபடி சாரி" என்று சொன்னேன். உடனே அவள் முகம் சற்று வாடியது.

"உண்மையாகவே நீ அதை மறந்து விட்டாயா? எப்படி உன்னால மறக்க முடிஞ்சது? " என்று என் கண்களை பார்த்து ஏக்கமாக கேட்டாள்.எனக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. அந்த கேள்வியில் ஆயிரம் அர்த்தங்கள் ஒளிந்து  இருப்பதாக தோன்றியது.

"அப்படியானால் அவளுக்கும் ஒரு வேளை எனக்கு தோன்றியது போலவே தோன்றி இருக்குமோ???. அவளுக்கும் என் மேல் காதல் இருக்குமோ??? " நினைக்கும் போதே, அப்படியே ஜிவ்வென்று வானத்தில் பறப்பது போல இருந்தது.நான் பதில் சொல்ல வாய் திறக்கும் போது அவள் சிரிக்க ஆரம்பித்தாள். 

"ஹா ஹா ஹா, ஏமாந்துட்டியா? சும்மா உன்னை டீஸ் பண்ண தான் விளையாட்டுக்கு சொன்னேன். பட் உன்னை இந்த மாதிரி டீஸ் பண்னுனா யுவர் ரியாக்ஸன் லுக்ஸ் சோ ஃபன்னி.சீரியசா எடுத்துக்காத "என்றாள். மனதில் தோன்றிய ஏமாற்றத்தை மறைத்து நானும் சிரித்தேன். 

மறுபடி அவளே தொடர்ந்தாள், "சூரி, உன்னை நேத்து தான் பார்த்தேனாலும், ரொம்ப நாளா பழகின மாதிரி ஃபீலிங். அதனால தான் கொஞ்சம் உரிமை எடுத்து விளையாடிட்டேன். உன்னை Hurt பண்ற மாதிரி இருந்திச்சுனா சொல்லிடு, I will not do that again" என்றாள்.

நான், "இல்லை, ஜென்னி, நான் தப்பா எடுக்கலை.உண்மையை சொல்லனும்னா, நீ இப்படி என்கிட்ட உரிமை எடுத்துக்கிறது எனக்கு ரொம்ப  பிடிச்சிருக்கு " என்றேன். 

அவள் விளையாட்டுக்கு என்று சொன்னது ஏமாற்றத்தை அளித்தாலும் அவளால் என்னுடன் சகஜமாக விளையாட முடிகிறது என்று சொன்னது என் மனதிற்கு இதமாய் இருந்தது. ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணைப் பிடிக்கவில்லை என்றால் இப்படி விளையாட முடியாது. வெறும் நட்பாகக் கூட இருக்கலாம், ஆனால் அவளுக்கு என்னைப் பிடித்திருக்கிறது என்பதை அறிந்த போதே என் காதலில் பாதி வெற்றி அடைந்ததைப் போல உணர்ந்தேன்.

அடுத்த ஐந்து நிமிடங்கள் அவள் தான் பேசிக் கொண்டே இருந்தாள். ஆனால் அவள் பேசியது தான் எதுவும் என் காதில் விழவில்லை! 

அவள் பேச்சின் போது அவள் தலை அசைவிற்கேற்ப அழகான ரிதமுடன் ஆடிக் கொண்டிருந்த அவளது  காதணிகள், பேச்சினூடே அவளது நெற்றியில் சரியும் முடியினை லாவகமாக ஒதுக்கி அவளது காதின் பின்புறம் சொருகும் அவளது அழகிய கை விரல்கள், அழகாக பராமரிக்கப் பட்டு, ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதால் வானவில் போல பல வண்ணங்களுடன் மின்னிய அவளது கை நகங்கள், அந்த விரல்கள் அவ்வப்போது விளையாடும் அழகிய டாலருடன் கூடிய அவளது செயின், அந்த செயின் குடியிருக்கும் அழகிய சங்கு போன்ற அவளது கழுத்து, மழை பெய்து சிறிது நேரம் கழித்து கண்ணாடி ஜன்னலில் அழகாக காட்சியளிக்கும்  சிறு நீர்த்துவளைகளைப் போல, அவளது பளிங்கு கழுத்தில் ஒட்டியிருந்த அழகிய வேர்வைத் துளிகள் என என் கவனம் நொடிக்கு நொடி மாறிக் கொண்டே இருந்தது.

"ஹே இங்க ஒருத்தி எவ்வளோ கஷ்டப்பட்டு, கதை அடிச்சிட்டு இருக்கேன், நீ என்ன பகல் கனவு கண்டுட்டு இருக்கியா? " - என் தொடையை கிள்ளி என்னை ஜென்னி நிஜ உலகிற்கு கொண்டு வந்தாள்.

"Sorry, I just got Zoomed out. எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு, கிளம்பறேன் " என்று சொல்லிவிட்டு கிளம்ப எத்தனித்தேன். 

அப்போது கை தவறுதலாக அவள் டேபிளின் மேல் இருந்த வண்டி சாவியைத் தட்டி விட அது கீழே விழுந்தது. அதனை எடுக்க அவள் குனிந்தாள். அனிச்சை செயலாய் நானும் குனிந்து எடுக்க, அவளது கை வண்டி சாவியையும், எனது  கை அவளது கையையும் பற்றியது. அவள் என்னை நிமிர்ந்து பார்த்தாள், 

"இந்த முறை எவ்வளவு நேரம் என் கையை பிடிச்சிட்டு இருக்க போறே?"  என்று சிரித்து கொண்டே கேட்டாள். 

சில நேரங்களில் நாம் எவ்வளவோ யோசித்தாலும் நம் மனதில் இருப்பதை வெளியே சொல்ல முடியாது. ஆனால் சில சமயங்களில் நாம் எவ்வளவோ முயன்றாலும் நம் மனதில் இருப்பதை மறைக்க இயலாது. இந்த முறை எனது மூளையின் அனுமதியின்றியே எனது வாய் செயல்பட்டு அந்த வார்தையை உதிர்த்தது.

"என் வாழ் நாள் முழுவதும் ஜென்னி" 

நான் விளையாட்டிற்கு சொல்கிறேனா? இல்லை உண்மையாக சொல்கிறேனா என்று தெரியாமல் என் கண்களை ஜென்னி ஊடுருவிப் பார்த்தாள். அதில் தெரிந்த தீவிரத்தைக் கண்டு சிரிப்பதை நிறுத்தினாள். ஆனால் அவள் விழிகளை எனது விழிகளில் இருந்து நீக்கவில்லை. இருவரது கண்களும் கலந்தன. இருவரது இமைகளும் சில நொடிகள் இமைக்க கூட மறந்தன. அந்த நொடியை வீணாக்க விரும்பாமல்

"ஐ லவ் யு ஜென்னி" என்றேன். 

படபடவென்று பட்டாம் பூச்சி போல இமைத்தது அவளது இமைகள். அவள் நடப்பது எல்லாம் கனவா இல்லை நிஜமா என்று யோசிக்கிறாள் என்று அவளது முகம் அப்பட்டமாகக் காட்டிக் கொடுத்தது. ஆனால் அவளது கண்களில் தெரிந்தது ஆனந்தமா இல்லை அதிர்ச்சியா  என்று தெரியவில்லை. சில நொடிகள் என்னை மீண்டும் உற்று நோக்கியவள் என் கைகளை விலக்கி விட்டு, எதுவும் சொல்லாமல் வெளியேறினாள்.

"ஒரு வேளை நான் அவசரப்பட்டு விட்டேனோ? காதலைச் சொல்லி உருவாக இருந்த நல்ல நட்பினைக் கூட கெடுத்து விட்டேனோ? " என மனதில் தோன்ற, அதற்குள் என் மனதின் இன்னொரு குரலோ "ஒரு பெண்ணிடம் காதலை சொல்லவே தனி தைரியம் வேண்டும், சபாஷ் சூரி " என்று என்னைத் தட்டிக் கொடுக்க. ஜென்னியின் மனதில் என்ன இருக்குமோ என்று யோசித்தவாறே எனது இருக்கையை நோக்கி நகர்ந்தேன்.

-தொடரும்.

வியாழன், 21 ஜூன், 2012

யாருக்கு யாரோ!!! - பாகம் 3.



பாகம் -1பாகம் -2பாகம் - 4பாகம் - 5பாகம் - 6

அடுத்த நாள் காலை,  வேலையை பார்த்துக் கொண்டு இருந்த போது ஜென்னி எங்களது கேபின் நோக்கி வந்து கொண்டிருந்தாள். எனக்குள் படபடப்பு அதிகமாகியது. மதன் ஜென்னியைப் பார்த்ததும் "ஹலோ " என்று கூறி புன்னகைத்தான். அதற்கு அவளூம் பதிலாக புன்னகை புரிந்தாள்.

"என்ன பிகருடா இவ!!!" என்று அவன் தனக்குள் முணுமுணுக்க, நான் அவனை முறைத்தேன்.  "பாம்பு காதுடா உனக்கு " என்று கூறிவிட்டு, என் முறைப்பில் இருந்து தப்ப அவனது மானிட்டரில் ஆழ்ந்தான்.

ஜென்னி உஷாவிடம் சென்று தன்னை அறிமுகப் படுத்தி விட்டு பேச ஆரம்பித்தாள். என் மனதிற்குள் இருவரும் என்ன பேசுகிறார்கள் என்று அறிந்து கொள்ள தோன்றிய ஆர்வத்தை ஒருவாறு அடக்கிக் கொண்டு என் வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். இருந்தாலும் இருவரும் சிரித்து சிரித்து பேசுவது என் காதில் விழாமல் இல்லை. ஆனாலும் என்ன பேசுகிறார்கள் என்று தெளிவாகக் கேட்கவில்லை. என்னிடம் திட்டு வாங்கினாலும் பரவாயில்லை என்று ஜென்னியை சைட் அடிக்கும் எண்ணத்துடன் மதன் திரும்பி பார்க்க, ஜென்னி என்னை ஒரக் கண்ணால் அடிக்கடி பார்ப்பதை அறிந்து கொஞ்சம் அதிர்ந்தான். அவன் மூளை நான் நேற்று கோபமாகப் பேசியதையும், இதையும் இணைத்து வேகமாகக் கணக்கிட ஆரம்பித்தது. ஏதோ தோன்றியவனாக அவன் என்னைத் திரும்பி பார்க்க, நான் காரியமே கண்ணாக மானிட்டரில் ஆழ்ந்திருந்தேன். ஜென்னித் திரும்பி செல்வதும், உஷா என்னை நோக்கி வருவதையும், அவர்களது காலணி எழுப்பிய ஒலியில் புரிய, வேலையில் இன்னும் கவனமாக இருப்பது போல காட்டிக் கொள்ள முயற்சித்தேன்.

என்னிடம் வந்த உஷா, "சூரி, நீ பிஸியா இருக்கியா?" என்று கேட்டாள்.

மானிட்டரில் இருந்து என் விழியை அகற்றாமலேயே, "ஆமா, என்ன வேணும்" என்று கேட்டேன். எனது சேரைப் பிடித்து அவள் பக்கம் திருப்பி விட்டு

"அய்யாவுக்கு, என்ன வேணும்னு திரும்பி கேக்க கூட நேரம் இல்லை..அவ்ளோ பிஸியா?? " என்றாள்.

அவளுக்கு ஒரு புன்னகையை பதிலாக அளித்து விட்டு, "ஒகே, சொல்லு என்ன வேணும்" என்றேன்.

"ஜென்னிக்கு அவளோட ப்ராஜெக்ட் போல்டர் செட் பண்ண ஹெல்ப் வேணுமாம். நீ தான் அதுல எக்ஸ்பர்ட்னு ஆச்சே, நீ ஃப்ரீயா இருக்கும் போது பண்ணித் தரயா? " என்று கேட்டாள்.

அதற்கு நான், "இல்லை உஷா, I have lot of stuffs to finish today. என்னால முடியாது " என்றேன். உண்மையிலேயே பெரிதாக வேலை இல்லை என்றாலும் பொய் சொன்னேன்.

உடனே உஷா, "ஹே just 10 minutes எனக்காக ப்ளீஸ் " என்றாள்.

"சாரி உஷா, ப்ளீஸ் புரிஞ்சிக்கோ. இன்னைக்கு நான் இந்த ரிப்போர்ட்ஸ் அனுப்பலைனா பெரிய level la Escalate ஆயிடும்" என்று பொய்யை மெய்பிக்க என்னால் முடிந்தவரை முயன்றேன். தொடர்ந்து, "இதோ இவன் வெட்டியா தானே இருக்கான், இவனை அனுப்பு " என்றேன் மதனைக் காட்டி. 

மதனுக்கு ஆச்சர்யாக இருந்தது. ஜென்னி பேரை உஷா சொன்னதுமே நான் உதவ உடனே தயாராக இருப்பேன் என்று நினைத்தான். ஆனால் நான் மறுத்தது அவனுக்கு என் மேல் ஆச்சர்யத்துடன் சந்தேகத்தையும் சேர்த்து கிளப்பியது. இருந்தாலும் ஒரு அழகிய பெண்ணுக்கு உதவ கிடைத்த வாய்ப்பை வீணாக்க விரும்பாமல் 

"Yeah, I can help her" என்று அவன் இருக்கையிலிருந்து எழுந்தான்.

அதற்கு உஷா அவனைப் பார்த்து, " ஒரு பொண்ணைப் பார்த்தாப் போதுமே, ஜொள்ளு விட்டுட்டு கிளம்பிடுவேயே!! நீ உக்காரு" என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்து 

"டே, இது டெவலப்மெண்ட் சம்பந்தமான வேலை, அவனுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்? உனக்கு மட்டும் தான் தெரியும். நீ ஹெல்ப் பண்ணுடா ப்ளீஸ். அவ ரொம்ப நல்லா பழகறா. நல்ல பொண்ணா தெரியறா, நான் கண்டிப்பா ஹெல்ப் பண்றேனு ப்ராமிஸ் பண்ணிட்டேன்..எனக்காக சூரி ப்ளீஸ் " என்றாள்.

உடனே மதன் " யானை தன் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக்குது. அதோட தலைவிதியை யாரால மாத்த முடியும்" என்று முணுமுணுத்தான். நான் அவனை முறைத்தேன். உஷாவுக்கு சரியாக கேக்காததால், 

"என்ன" என்று கேட்டாள். 

நான் உடனே, "விடு கடுப்பிலே ஏதோ உளர்றான், சரி உனக்காக நான் அவளுக்கு ஹெல்ப் பண்றேன்." அந்த "உனக்காகவை" கொஞ்சம் அழுத்திச் சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

அடுத்த பத்தாவது நிமிடம், நான் எனது இருக்கைக்கு திரும்பி வர, உஷா இருக்கையில் இல்லை. மதன் மட்டும் தான் தனியாக இருந்தான். என்னைப் பார்த்ததும்

"சார், எல்லாம் நீங்க நினைக்கிற படியே நல்லா நடக்குதா? "என்று நக்கலாகக் கேட்டான். நான் அவன் கேள்விக்கு பதில் அளிக்காமல் எனது இருக்கையில் அமர்ந்தேன். அவனே தொடர்ந்தான்.

"எனக்கு எல்லாம் புரியற மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு. ஆனா நீ நல்லாவே நடிக்கறடா " என்றான். நான் அவன் எதைப் பத்திப் பேசுகிறான் என அறிந்தும் புரியாதது போல அவனைப் பார்த்து விட்டு

"நீ என்ன பேசறேனு எனக்கு புரியலை மதன். எனிவே, எனக்கு நிறைய வேலை இருக்கு. வெட்டிப் பேச்சை அப்புறமா வைச்சுக்கலாம் " என்று என் மானிட்டரில் கவனம் செலுத்த, மதன் எனது இருக்கை நோக்கி வந்து எனது மானிட்டரை அணைத்தான்.

"உஷாவை ஏமாத்துன மாதிரி என்னையும் ஏமாத்த முடியாது சூரி. நீ காலைல வந்ததுமே அந்த ரிப்போர்ட் ஐ அனுப்பிட்டேனு எனக்குத் தெரியும். சரி நான் நேராவே விசயத்துக்கு வரேன். உனக்கும் ஜென்னிக்கும் நடுவிலே என்ன நடக்குது? " என்று கேட்டான்.

நான், "எனக்கும் அவளுக்கும் நடுவிலயா?? ஓ மை காட்.. உனக்கு மறை கழண்டுடிச்சுனு நினைக்கிறேன். வா போய் கூலா ஏதாச்சும் சாப்பிவோம், உன் பித்தம் அப்பவாச்சும் தெளியுதானு பார்ப்போம் " பேச்சை வேறு திசையில் கொண்டு செல்ல முயன்றேன்.

"நடிக்காத சூரிஎதுவும் இல்லைனா, நீ அவளைப் பத்தி தப்பா பேசுனதும் எதுக்கு கோபப் பட்டே? அவள் உன்னை ஆயிரம் தடவை யாருக்கும் தெரியாம பார்த்தாளே அதுக்கு என்ன அர்த்தம்? உஷாக்கு உன் மேல doubt வரக் கூடாதுனு ஜென்னிக்கு ஹெல்ப் பண்ண interest ஏ இல்லாத மாதிரி நடிச்சியே அதுக்கு என்ன அர்த்தம்?" கேள்விக் கணைகளால் துளைத்தான்

"மதன் நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை. நீயாவே எதை எதையோ முடிச்சு போட்டு கற்பனை பண்ணிக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பு இல்லை " ஒட்டாமல் பதில் அளித்து விட்டு எனது மானிட்டரை ஆன் செய்தேன்.

அதற்கு மதன் மறுபடி எனது மானிட்டரை ஆப் செய்து விட்டு "சூரி எனக்கு பதில் தெரிஞ்சாகணும், நீ என் கிட்ட இருந்து அவ்ளோ ஈசியா தப்பிக்க முடியாது" என்றான்.

"மதன்..You are seriously F*&^%$#@ irritating me..எங்களுக்குள்ளே எதுவும் இல்லை.அப்படி இருந்தாலும் நான் உன் கிட்ட எல்லாமே சொல்லணும்கிற அவசியம் இல்லை" கொஞ்சம் சூடாகவே பதில் அளித்து விட்டு எனது மானிட்டரை மீண்டும் ஆன் செய்தேன். அவன் என்னிடம் இருந்து அப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவில்லை. ஏதோ சொல்ல வாய் திறக்கையில் உஷா நுழைவதைப் பார்த்து அமைதியானான்.

"சூரி சீக்கிரம் வெளியே வா, நான் உன்கிட்ட ரொம்ப நாளா சொல்லிட்டு இருந்தேன்ல ஒரு கார் சூப்பரா இருக்கு, அதே மாதிரி காரை நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் வாங்கனும்னு..அந்த கார் வெளியே நிக்குது, உனக்கு காமிக்கிறேன். மதன் நீயும் வா" என்று ஒரு குழந்தைப் போல உற்சாகத்துடன் என் கையைப் பிடித்து இழுத்து சென்றாள். 

அப்போது மதன் என்னைப் பார்த்த பார்வை "இவளை ஏமாத்த உனக்கு எப்படிடா மனது வந்துச்சு" என்று சொல்வது போல இருந்தது. அவனது பார்வையை சந்திக்க இயலாமல் தலையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு உஷாவைப் பின் தொடர்ந்தேன்.

-தொடரும்.

செவ்வாய், 19 ஜூன், 2012

யாருக்கு யாரோ!!! - பாகம் 2.



பாகம் -1,பாகம் -3பாகம் - 4பாகம் - 5பாகம் - 6

என்றும் இல்லாமல் அன்று அவ்வளவு நேரத்தில் நான் வீட்டுக்கு வருவதைப் பார்த்த என் அம்மா ஆச்சர்யத்துடன், 

"என்னாச்சுப்பா இப்ப வீட்டுக்கு வந்திருக்கே?" என்று கேட்க

"ஏன் appointment வாங்கிட்டு தான் வரணுமா? " - கோபத்தில் கத்தி விட்டு நிற்காமல் மாடிப்படி ஏறிய என்னை என் அம்மா புரியாமல் நோக்கினார்கள்.

நேராக எனது அறைக்கு சென்று அப்படியே கட்டிலில் விழுந்தேன்.ஒரு ஐந்து நிமிடங்கள் கண்ணை மூடி அமைதியாக இருக்க முயற்சித்தேன். மனதிற்குள் ஒரு போராட்டமே நடந்து கொண்டு இருந்தது. 

"யார் மேல் கோபம் எனக்கு? தவறாக பேசிய மதன் மீதா இல்லை எல்லா தவறுகளையும் செய்து கொண்டு இருக்கும் என் மீதா? " அதற்கான விடை நன்றாகத் தெரிந்திருந்தும் அதை மனம் ஒத்துக் கொள்ள மறுத்து சுழ்நிலையின் மீது பழியைப் போட்டது.

அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தேன். என் அம்மா தான்,

"இவ்வளவு நேரத்துல வந்திருக்கே, பார்த்தா சாப்பிட்ட மாதிரி தெரியலை. சாப்பாடு குக்கர்லே வைச்சிருக்கேன். அது ஆகறதுக்குள்ளே, இந்த மோர் கொஞ்சம் குடி" - என்று பாசமாக டம்ளரை நீட்டினார்கள். நான் குடித்து விட்டு, டம்ளரைத் திருப்பிக் கொடுத்தேன்.

"சரி, கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு, நான் சாப்பாடு ஆனதும் கூப்பிடறேன்." - என்று கூறி விட்டு திரும்பினார்கள்.

"ம்மா" - படி இறங்கி செல்லும் என் அம்மாவை அழைத்தேன். திரும்பி பார்வையாலே என்னவென்று கேட்டார்கள்.

நான், "சாரி, நான் ஏதோ கோபத்துல கத்திட்டேன் " 

"சை..அதுக்கு எதுக்குடா சாரி எல்லாம். நீ என்ன வேணும்னா கத்துனே! நல்லா ரெஸ்ட் எடு. சாப்பாடு ஆனதும் கூப்பிடறேன்" - என்று திரும்பி சென்றார்கள். அம்மாவின் அன்பும், ஜில்லென்று இறங்கிய மோரும் என் கோபத்தைக் கொஞ்சம் தணித்தது.

என் அறைக்குள் நுழைந்து எனது மடிக் கணிணியை உயிர்ப்பித்தேன். என்னுடைய பிரைவேட் ப்ளாக் (Blog) ஒப்பன் பண்ணினேன். இது என் டைரி போல, யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத விசயங்களை இதில் கொட்டும் போது மனம் கொஞ்சம் நிம்மதி அடையும். பல வருடங்களாக என் வாழ்க்கை சம்பவங்களை எழுதி வைத்து யாருக்கும் காட்டாமல் ரகசியமாக பாதுகாத்து வருகிறேன். 

எவ்வளவு நேரம் அமர்ந்து இருந்தேன் என்றே தெரியவில்லை, என் அம்மா கதவை தட்டிய போது தான் நினைவுக்கு வந்தேன். சாப்பிட எந்திரித்துத் கிளம்பினேன். 

நான் விட்டுச் சென்ற கணினியின் திரைகளில் நீல நிற வண்ணத்தில்,

9 மணி மீட்டிங்காக, 5 நிமிடம் முன்பே சென்று எல்லாம் சரியாக இருக்கிறதா என்று செக் பண்ணிக் கொண்டு இருந்தேன். 

"எஃக்யூஸ்மி "  என்று குயில் போல ஒரு குரல். நிமிர்ந்து பார்தேன். குயில் இல்லை, அழகு மயில் ஒன்று நின்று கொண்டு இருந்தது. 

"ஐ யம், ஜென்னி, அசோசியேட் இன் திஸ் ப்ராஜெக்ட்" என்று என் கண்களை பார்த்தவாறே கை கொடுத்தாள்.

"ஐ யம் சூரி, சீனியர் அசோசியேட்" என்று கை கொடுத்தேன். அப்படியே ஷாக் அடித்த மாதிரி ஒரு ஃபீலிங்.மகதீரா படம் பார்த்த எஃபெக்ட் ஆகக் கூட இருக்கலாம். 

அவள் கண்ணை நோக்கினேன். அதில் இருக்கும் காந்த சக்தி என்னை அப்படியே கட்டிப் போட்டது. அந்த நொடியில் அவள் இமை இமைக்க, அப்படியே இதயத்திற்குள் மின்னல் பாய்ச்சியது போல ஒரு உணர்வு. ஒரு பெண்ணின் கண்கள் 1000 வாட்ஸ் மின்சாரத்தை பாய்ச்ச முடியும் என்று அப்போது தான் உணர்ந்தேன். இதுவரை எந்தப் பெண்ணைப் பார்த்த போதும் தோன்றாத உணர்வு இது. இதற்கு பெயர் தான், லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் ஓ??? யோசனையில் இருந்த என்னை அவள் குரல் கலைத்தது.

"சூரி,நான் போய் உக்காரட்டா" என்று கேட்டாள், 

நான், "ஷ்யூர், ப்ளீஸ்" என்றேன். 

அவள் சிரித்துக் கொண்டே "அதற்கு நீ என் கையை விடணும் இல்ல?"  என்று கூறினாள். அப்பொழுது தான் நான் இன்னும் அவள் கையை பிடித்துக் கொண்டே இருப்பதை உணர்தேன். 

"சாரி" என்று சொல்லி விட்டு கையை விடுத்தேன். அவள் ஒருமையில் என்னை அழைத்தது ரொம்பவும் பிடித்திருந்தது. அவள் ஒரு விதமான சிரிப்புடன் இருக்கையில் சென்று அமர்ந்தாள்.

பிறகு அடுத்த ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்கில் நான் நானாகவே இல்லை. எவ்வளவோ தவிர்க்க முயன்றும், என் பார்வை அவள் இருக்கும் இடத்தையே சுற்றி சுற்றி வந்தது. எங்கள் பார்வைகள் சங்கமித்த போது எல்லாம் ஒரு புன்னகை புரிந்து மேலும் இம்சை செய்தாள். அவள் பார்க்காத நொடியில் அவளைப் பார்த்த என் விழிகள், கைகளுக்கு செய்தி அனுப்ப,அது தன்னிச்சை செயலாய் காகிதத்தில் கிறுக்கியது.

மீன்கள் என எண்ணி, 
வலையை விரித்தது என்னவோ 
உன் கண்களுக்குத் தான்...
ஆனால் அதில் சிக்கிக் கொண்டது 
நான் அல்லவா!

ஆகா, என்னையும் ஒரு பெண் கவிதை எழுத வைத்து விட்டாள். 

அப்போது, என் நண்பர் ஒருவர் சொன்னது எனக்கு நினைவு வந்தது. "எப்பொழுது ஒருவன் ஒரு வரிக்குள் அடங்கும் ஒன்றை மூன்று வரிகளுக்கு மேல் எழுதி ஆச்சர்யக் குறியுடன் முடிக்கிறானோ, அப்போதே அவன் காதல் வயப்பட்டு விட்டான் என்று அர்த்தம்.அதை கவிதை என்று அவன் நினைக்கும் நொடியில் காதல் முற்றி விட்டது என்று அர்த்தம்"

"அப்படி என்றால் இது காதல் தானா?" நினைக்கையிலேயே மனதிற்கு இதமாக இருந்தது. 

வெள்ளை உடையில் என்னையும் அவளையும் சுற்றி, நூறு பெண்கள் "நம் தன நம் தனா" என்ற இசையுடன் ஆடுவது போல என மனதிற்குள் காட்சிகள் ஓடியது. அதற்குள் மீட்டிங்கும் முடிந்து விட வெளியே செல்கையில், கதவருகே சென்றவள் திரும்பி என்னை ஒரு பார்வை பார்த்து புன்னகைத்தாள். அந்த பார்வையின் அர்த்தம் என்னவென்று எனக்கு தெரியவில்லை, ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது. என்னையும் ஒரு பெண் காதலில் வீழ்த்தி விட்டாள்!.

-தொடரும்.

ஞாயிறு, 17 ஜூன், 2012

யாருக்கு யாரோ!!! - பாகம் 1.




பாகம் - 2பாகம் - 3 , பாகம் - 4,  பாகம் - 5பாகம் - 6

"குட் மார்னிங் ரிஷி " - எனது கணினியில் மூழ்கியிருந்த என்னை அந்த அழகிய குரல் கலைத்தது. ரிவால்விங் சேரில் அப்படியே சுழன்று பின் பக்கம் பார்த்தேன். உஷா அவளுடைய ட்ரேட் மார்க் சிரிப்புடன் எங்களின் கேபினுக்குள் வந்து கொண்டு இருந்தாள். ஒரு நிமிடம் அவளது அழகை பார்த்தவுடன் அப்படியே மெய் மறந்து நின்றேன். அவளை விழுங்கி விடுவது போல பார்த்த என் பார்வை போகும் இடம் அறிந்து அவள் கன்னங்கள் சிவந்து அவளை மேலும் அழகாக காட்டியது. 

அவள் இருக்கையில் அமர்ந்து தனது கணினியை உயிர்ப்பித்து கொண்டே, போதும் பார்த்தது என்பது போல சைகை காமித்து விட்டு, மறுபடியும் 

"குட் மார்னிங் ரிஷி " என்றாள், "ரிஷி " யில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து. 

ஒரு புன்னகையை பதிலாக உதிர்த்து விட்டு "நீயும் ஆரம்பிச்சிட்டியா?" என்று கேட்டேன். 

அருகில் இருந்த மதன், "ரிஷியா??! சூரி எப்போ உன் பேரை மாத்தினே?"

"நீ வேற ஏன் டா? அவளுக்கு வேற வேலை இல்லை, ஏதோ உளரிட்டு இருக்கா" - என்றேன் சூரி என்று அழைக்கப்படும் சூர்ய பிரகாஷ் ஆகிய நான்.

அப்போது உஷா குறுக்கிட்டு, "நேத்து நான் சூரி வீட்டுக்கு போய் இருந்தப்ப அவங்க வீட்டுக்கு வந்திருந்த Relative அவனை ரிஷினு கூப்பிட்டாங்க, என்ன மேட்டர்னு விசாரிச்சா கொஞ்ச வருசத்துக்கு முன்னால  சன் டிவில டீலா நோ டீலானு ஒரு ப்ரொக்ராம் வந்துட்டு இருந்திச்சு. அதுல வர ரிஷி, நம்ம சூரி மாதிரியே இருப்பானாம். அதனால அவங்க  வீட்டுல அவனை ரிஷினு தான் கூப்பிடுவாங்களாம்"

உடனே, மதன் என்னை ஒரு நிமிடம் பார்த்து விட்டு, உஷாவை கேள்விக் குறியுடன் நோக்கினான். அந்த பார்வை. "எனக்கு அப்படித் தோணலையே" என்று சொல்வது போல இருந்தது.

உஷா மதனிடம் மெதுவான குரலில், "எனக்கும் அப்படித் தோணலை, ஆனா நம்ம ஆளுக்கு, அவனைப் பிடிக்காது, அதனால சும்மா கடுப்பேத்தத் தான் அப்படி கூப்பிடறேன்"

உடனே மதன் சத்தமாக. "ஒ..யா..கொஞ்சம் உத்து பார்த்தா எனக்கும் அப்படி தான் தெரியுது" என்றான்.

தொடர்ந்து " மிஸ்டர் ரிஷி, நாளைக்கு புதுசா ரெண்டு பேரு நம்ம டீம்ல ஜாயின் பண்றாங்க. அந்த மாங்கா மண்டை மேனேஜர், என்னை அவங்களுக்காக ஒரு மீட்டிங் Arrange பண்ண சொல்லி இருக்கான். ஆனா நாளைக்கு காலைல என் ஆளோட படத்துக்கு வரேனு கமிட் பண்ணிட்டேன், மதியம் தான் ஆபிஸ் வருவேன். நீ நாளைக்கு எனக்கு பதிலா மீட்டிங் போனா. நான்  இந்த சனிக்கிழமை உனக்கு பதிலா ப்ராஜெக்ட் சப்போர்ட் பண்றேன். டீலா நோ டீலா" என்றான்.

அவனை கோபமாக முறைத்து, "அந்த டேஷ் டேஷ் பய பேரை சொல்லி ஹெல்ப் கேக்கரே, கண்டிப்பா நோ டீல்" என்றேன். 

உடனே மதன் ஒரு அசட்டு சிரிப்புடன், "மச்சி நாளைக்கு வர டீம்ல ஒரு சூப்பர் பிகரு இருக்குனு கேள்வி பட்டேன், உனக்கு லக் இல்லை போல, நான் வேற யாராச்சும்…"

அவன் முடிக்கும் முன் குறுக்கிட்டு "டீல்" என்றேன். 

என் கையில் ஒரு குத்து விட்டவாறே "நோ டீல்" என்றாள் உஷா. 

மதனை பார்த்து ஒரு கோப பார்வையுடன் "உன் லவ்வரோட எஞ்சாய் பண்ணு. வேண்டாம்னு சொல்லலை, ஆனா அதுக்கு என் லவ்-க்கு ஏன் ஆப்பு வைக்கறே" என்றாள்.

இங்கே எனக்கும் உஷாவுக்கும் ஆன உறவு பற்றி சொல்லியே ஆக வேண்டும். இரண்டு வருடம் முன் இந்த பணியில் சேர்ந்த போது அறிமுகமாகி வெகு விரைவில் நல்ல தோழியும் ஆனாள். அவள் அக்காவுக்கு மாப்பிள்ளை பார்த்து கொண்டு இருந்த போது எனது அண்ணனை பற்றி அவளிடம் சொல்ல, இரு வீட்டு பெரியவர்களும் பேசி ஒரு நல்ல நாளில் திருமணம் முடிந்தது. நண்பர்களாய் இருந்த நாங்கள் உறவினர்கள் ஆனோம். 

நாங்கள் நல்ல நண்பர்கள், கட்டிக் கொள்ளும் முறை வேறு, சும்மா இருப்பார்களா வீட்டுப் பெரியவர்கள்? அண்ணா கல்யாணம் முடிஞ்சு ஒரு வருசத்துக்கு அப்புறம் எங்கள் திருமணப் பேச்சை எடுத்தார்கள். உஷா உடனே ஓகே சொல்லி விட்டாள். அதற்குப் பிறகு தான் தெரிந்தது உஷா எனை உயிருக்கு உயிராக நேசிக்கிறாள் என்று. உஷாவை எனக்கும் பிடிக்கும். ஆனால் காதலியாக நான் அவளை என்றும் பார்த்தது இல்லை. அதனால் முதலில் நான் சரி என்று சொல்லவில்லை. அதற்காக வேண்டாம் என்று மறுக்கவும் இல்லை. என் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் எல்லாரும் என்னைக் குடைய. எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

பிறகு என் வீட்டினரின் நெருக்கடியால் அரை மனதாக சரி என்று சொல்லி விட்டேன். இன்னும் மூன்று மாதத்தில் எங்கள் திருமணம். ஆனாலும் என் மனதில் ஒரு குற்ற உணர்வு உறுத்திக் கொண்டே இருக்கிறது. உஷாவிடம் இதைப் பற்றிப் பேசவா வேண்டாமா என்ற குழப்பம் இருந்து கொண்டே இருக்கிறது. சரியான நேரம் அமையும் போது அவளிடம் என் மனதில் இருப்பதைக் கொட்டி விட காத்துக் கொண்டு இருக்கிறேன்.

அடுத்த நாள் மதியம், மதன் அலுவலகத்தில் நுழையும் போது, உஷா அவனிடம், "மதன் எப்போ இருந்து லிப்ஸ்டிக் போட ஆரம்பிச்சே?" மதன் ஒரு அசட்டு சிரிப்புடன் அவனது உதட்டை கர்சீப்பால் துடைத்தான். 

உடனே உஷா, "அங்கே ஒன்னும் இல்லே, இன்னைக்கு சினிமா போனியே,  எதாச்சும் நடந்துச்சானு செக் பண்ண சும்மா தான் சொன்னேன். இப்போ கன்பார்ம் ஆயிடிச்சு" என்று சிரித்தாள். 

அதற்கும் மதன் அசடு வழிந்து விட்டு இருக்கையில் வந்து அமர்ந்தான்.

பின் எனக்கு மட்டும் கேக்கும் குரலில், "மச்சி லிப்ட்ல வரும் போது, அந்த சொட்டை தலை மேனேஜர் ஒரு பிகர் கிட்ட வழிஞ்சிட்டு இருந்தான். அவ தான் நம்ம டீம்-க்கு புதுசா வந்திருக்கிற பொண்ணுனு அறிமுகம் பண்ணி வைச்சான். என்ன பிகருடா அவ!!!, சேன்சே இல்ல மச்சி… "ஜென்னி"... பேரே செம கிக்கா இருக்கு."

உடனே நான் அவனை இடை மறித்து, "உன் விசா ப்ரொசெஸ் அப்பாயின்ட்மெண்ட்க்கு சென்னைக்கு டிக்கட் புக் பண்ணிட்டியா", டாபிக்கை மாற்ற முயன்றேன்.

"இப்ப அதுவாட முக்கியம். இந்த மாதிரி ஒரு பிகரு நம்ம ஆபிஸ் வந்து இருக்கு. அதை விட்டுட்டு எங்கேயும் போற மாதிரி இல்லை. அவளை நீ பார்த்தியா? அது அது *****(Sensored)****** மாதிரி இருக்கு. அவளை ******(Sensored)******* இல்லைனா

அவன் சொல்லி முடிக்கும் முன், கோபமாக என் சேரில் இருந்து நான் எழுந்தேன்.

"மறுபடி இப்படி பேசர மாதிரி இருந்தா என்னோட பேசவே வேண்டாம்"  சொல்லிவிட்டு அவன் பதிலுக்கு நிற்காமல் வெளியேறினேன். 

மதன் எவ்வளவோ முறை இது போல அடுத்த பெண்களை பற்றி பேசி உள்ளான், ஆனால் நான் ஒரு போதும் இவ்வாறு கோபம் அடைத்தது இல்லை. இன்று மட்டும், நான் ஏன் கோபமாக போகிறேன் என தெரியாமல் மதன் குழப்பத்துடன் இருக்க, நான் கோபமாக போவதைப் பார்த்த உஷா மதனை கேள்விக்குறியுடன் நோக்கினாள்.  மதன் ஒன்றும் புரியாமல் "நத்திங்" என்று சொல்லி விட்டு நான் சென்ற வழியை பார்த்து கொண்டு இருந்தான்.

-தொடரும்.

வியாழன், 14 ஜூன், 2012

மச்சி அவ உன்னை பார்க்கறாடா!!!


இது எனது "ஏன் சார் எனக்கு மட்டும் இப்படி எல்லாம்??"பதிவின் தொடர்ச்சி. லண்டன்ல இருந்து Preston திரும்பி வரும் போது நிகழ்ந்த அனுபவம்அந்த அனுபவத்தை…"டேய் ட்ரைலரை ரொம்ப நேரம் ஓட்டுனா எந்திரிச்சு தம் அடிக்க போய்டுவோம்,ஒழுங்கு மரியாதையா மெயின் படத்தைப் போடு"-னு நீங்க திட்டறது காதுல விழுகுது..அதனால படத்துக்கு சாரி கதைக்கு நேரா போயிடுவோம்

"We have reached Victoria Bus terminal, London. Thanks for traveling with National Express" நம்ம டிரைவர் அண்ணன் குரல் கேட்டு அப்படியே எந்திரிச்சு ஜன்னல் வழியாப் பார்த்தேன். வெளியே மழை லைட்டா தூறிட்டு இருந்திச்சு. பஸ்ல இருந்து இறங்கினா குளிருல அப்படியே வாய் தந்தி அடிக்க ஆரமிச்சது. என் ஃபோன் எடுத்து temperature எவ்ளோனு பார்த்தா 8 டிகிரி. "அடப்பாவிகளா, இப்ப தாண்டா ரெண்டு வாரத்துக்கு முன்னாடி summer start ஆயிடிச்சினு சொல்லி லீவ் எல்லாம் விட்டீங்க. உங்க ஊர்ல 8 டிகிரிக்கு பேரு தான் சம்மர் ஆ???" லண்டன் போறோமே, அங்க கொஞ்சம் பிகருக எல்லாம் high class ஆ இருக்குமேனு பந்தா பண்றதுக்குனு ஒரு jocket போட்டுட்டு வந்ததால கொஞ்சம் தப்பிச்சேன். 

மணியைப் பார்த்தா அப்ப தான் 6:30. நான் போக வேண்டிய இடம் 8:30 க்கு தான் திறப்பான். இன்னும் 2 மணி நேரம் இருக்கு, பரவாயில்லை கொஞ்சம் நிதானமாவே போகலாம். பாக்கெட்ல தடவிப் பார்த்து 30 pents சில்லறை எடுத்தேன். எதுக்குனு கேக்கறீங்களா? லண்டன்ல உச்சா போகணும்னா free a எல்லாம் போக முடியாது. Train station, Bus station nu எல்லா இடத்துலயும் பாரபட்சமே இல்லாம 30 p கப்பம் கட்டியே ஆகனும். 

உள்ள போயி முக்கியமான வேலையை முடிச்சதுக்கு அப்புறமா, மூஞ்சியை நல்லா கழுவி,  perfume  எல்லாம் அடிச்சிட்டு, தலைக்கு ஜெல் தடவிட்டு பார்த்தா, அட அட என் கண்ணே பட்டுடும் போல இருந்திச்சு. குளிக்காம இருக்கிறதை மறைக்க என்னவெல்லாம் பண்ண வேண்டி இருக்கு!!!.

 "டேய் குளிக்காம விட்டுட்ட பரவாயில்லை, நீ இந்த கேப்புல பல்லு விலக்குனதுக்கான அறிகுறி கூட எதுவுமே இல்லையேனு" கூட்டத்துல இருந்து யாரோ குரல் எழுப்பறது கேக்குது.

 "ஹி ஹி ஹி. ஒரு நாள் தானே போறோம் Brush, Paste லாம் எதுக்குனு வீட்டிலேயே வச்சிட்டு வந்துட்டேன்".

 "அட கண்றாவி, ஸ்டைல்காக hair gel, Jocket, perfume lam கொண்டு வர முடியுது, ஆனா paste,Brush கொண்டு வரலை..வெளங்கிடும்ம்ம்-னு"  சொல்றீங்களா?? 

"விடுங்க பிரதர் ஆடு மாடு எல்லாம் தினமும் பல் விலக்குதா என்ன? அதுக்குத் தான் mint flavor ல Chewing gum வச்சு இருக்கேனே!" 

வெளியே வந்தா, மணி 7 ஆச்சு. வேணும்கிற File மட்டும் எடுத்துட்டு 3 pound செலவு பண்ணி bag i left Luggage la போட்டுட்டு train station போனேன். ஏன்னா நான் போகிற இடத்துல bag, laptop lam allow பண்ண மாட்டாங்க.

 "அப்படி எங்கே போறேனு" கேக்கறீங்களா?

 "அது தொழில் ரகசியம், சாரி நீங்க மிரட்டிக் கேட்டாலும் சரி, அடிச்சு கேட்டாலும் சரி, சொல்ல மாட்டேன்".

 அடுத்த நாலு மணி நேரம் நடந்தது எல்லாமே confidential matter.so அதை அப்படியே skip பண்ணிடலாம். வந்த வேலையை முடிச்சிட்டு bus station திரும்ப வந்தப்ப மணி 11:30. என் ஊருக்கு போற பஸ் மதியம் 1:30 மணிக்கு தான்.

 "2 மணி நேரம் இருக்கே, நம்ம 'காத்திருப்பது தானே காதல்' கதையை உருப்படியா உக்காந்து எழுதி முடிச்சிடலாம்னு" நினைச்சு என் Mac book i ஓப்பன் பண்ணினேன்.ரொம்ப சுவாரசியமா எழுதிட்டு இருந்தப்ப, ஏதோ மனசுக்குள்ள ஒரு நெருடல். நிமிர்ந்து பார்த்தேன். 

அங்கே 3 பைங்கிளிக அரட்டை அடிச்சிட்டு இருந்திச்சு..எல்லாமே, ஆங்கிலப் பைங்கிளிகள் தான். அதுல ஒரு பைங்கிளி அப்பப்போ என்னை லுக் விடற மாதிரி இருந்திச்சு. பின்னாடித் திரும்பி பார்த்தேன் யாராச்சும் இருக்காங்களானு. ஏன்னா எத்தனையோ தடவை பின்னாடி இருக்கிறவனுக்கு லைன் அடிக்கும் போது, ஒரு வேளை நம்மளைத் தான் பாப்பா பாக்குதோனு தப்பா நினைச்சு ரொமாண்டிக் லுக் விட்டு நிறைய பல்பு வாங்கி இருக்கோம்ல!.

பின்னாடி யாருமே இல்லை. இருந்தாலும் என்னைத் தான் பார்க்குதுனு நம்ப முடியலை. பின்னே, பார்த்தவுடனே பிடிக்க நான் என்ன "வாலு" சிம்புவா? இல்லை அந்த பொண்ணுதான் ஹன்சிகாவா?

எதுக்கும் கன்பர்ம் பண்ணிக்கலாம்னு, அங்கே இருந்து எந்திரிச்சு அந்த பொண்ணுக்கு side la இருக்கிற சேர்ல உக்கார்ந்தேன். ஒரு ரெண்டு நிமிசம் போயிருக்கும். அவ மறுபடி என்னைத் திரும்பி பார்த்தா. "மச்சி அவ உன்னைப் பார்க்கறாடானு" என் mind voice சொல்ல அப்படியே வானத்துல பறக்கிற மாதிரி ஃபீலிங். 

போன வாரம் Faux Haux i யும் Spikes - யும் மிக்ஸ் பண்ணி ஒரு புது ஸ்டைல்ல hair cut பண்ணிட்டு வந்தப்ப நம்ம நண்பர்கள் எல்லாம், "மச்சா, கலக்குற, அப்படியே அந்த காலத்து David Becham மாதிரி இருக்கேனு" சொன்னானுங்க. ஆனாலும் ஒரு ஓசி "டீ" -கும், ஓட்டை வடைக்கும் ஆசைப்பட்டு தான் சொல்றானுகனு நினைச்சு free a விட்டுட்டேன், ஒரு வேளை உண்மையைத் தான் சொன்னானுகளோ? "சே இந்த மாதிரி பாசக்கார பயலுகளைப் பத்தித் தப்பா நினைச்சுட்டமேனு" ஒரே பீலிங் ஆ போயிடிச்சு.

ஒரு பொண்ணு நம்மளைப் பார்க்குதுனு தெரிஞ்சதுக்கு அப்புறம், எங்கத்த போயி கதை எல்லாம் எழுத? "காலமெல்லாம் காதல் வாழ்க" முரளி மாதிரி அப்பப்ப ஓரக் கண்ணால சைட் அடிச்சிட்டே time pass பண்ணிட்டு இருந்தேன். கொஞ்ச நேரம் கழிச்சு, "இதுலாம் சரிப்பட்டு வராது,  போய் அந்த பொண்ணுகிட்ட நம்மளை introduce பண்ணி, கொஞ்சம் கடலையை வறுக்கலாம்னு" நினைச்சு எந்திரிச்சேன். இந்த ஊருப் பொண்ணுக US பொண்ணுக அளவுக்கு ரொம்ப ஜாலி, open type கிடையாது. ஆனா நம்ம ஊர் பொண்ணுகளை மாதிரி எதுக்கெடுத்தாலும் செருப்பை கழட்டற ரகமும் கிடையாது. அந்த தைரியம் தான்! 

நான் 4 அடி கூட எடுத்து வைச்சு இருக்க மாட்டேன். ஒரு பைங்கிளி ஏதோ சொல்லி, மத்த ரெண்டு பைங்கிளியையும் எழுப்பி இழுத்துட்டு போயிடிச்சு. போகும் போது, என் பிகர், அப்படியே "சுப்ரமணியபுரம்" சுவாதி மாதிரி திரும்பி ஒரு look விட்டிச்சு பாருங்க! அப்படியே, மனசுக்குள்ள ஆயிரத்தெட்டு பட்டாம்பூச்சி பறக்கற பீலிங். 

எனக்கு follow பண்றதா வேண்டாமானு ஒரே குழப்பம். சரி அங்க சுத்தி இங்க சுத்தி, கடைசியா இங்க தானே வந்தாகணும்னு wait பண்ண ஆரமிச்சேன். 5 நிமிசம் ஆச்சு வரலை, 10 நிமிசம் ஆச்சு வரலை. 13 ஆவது நிமிசம் வயித்துக்குள்ளே மறுபடி பீலிங், ஆனா இந்த time வேற பீலிங். பசி வயித்தைக் கிள்ள ஆரமிச்சிடிச்சு. சாப்பிட்டு வந்து பார்த்துக்கலாம்னு வெளியே சாப்பிடப் போனேன்.

கரெக்டா, 1:15 க்கு மறுபடி பஸ் ஸ்டாண்ட் வந்தேன். Display la 18 ஆம் நம்பர் platform la இருந்து என் பஸ் போகும்னு போட்டு இருந்தான். அந்த பொண்ணு இருந்த இடத்துக்கு அப்படியே Opposite. அவளைப் பார்க்க போனா, லேட் ஆயிடும், மறுபடி டிரைவர்ட்ட இருந்து கெட்ட வார்த்தைல திட்டு வாங்கணும். பஸ்-க்கு போனா அவளை அதுக்கு அப்புறம் பார்க்கவே முடியாது. இப்படி ஒரு இக்கட்டான நிலைமை. சரி திட்டு வாங்குறது நமக்கு என்ன புதுசா? அந்த பொண்ணு இருந்த இடத்துக்கு போனேன். அங்க போனா யாருமே இல்லை. வடை போச்சே!!! 

சரி நமக்கு கொடுத்து வைச்சது அவ்ளோதான்னு நினைச்சுட்டு platform 18 போனேன். என்னால நம்பவே முடியலை. அங்க என் பைங்கிளி! ஒரே குஷியா பஸ் ஏறினேன். அவளும் என்னைப் பார்த்தா, அவ முகத்துலயும் ஒரு "பளிச்". அவ சீட்டுக்கு ரெண்டு சீட் முன்னாடி உக்கார்ந்தேன். 

மனசுக்குள்ளே ஒரு calculation. "அடுத்து வண்டி 2 மணி நேரம் கழிச்சு Birmingham la நிக்கும். அங்க போயி அவளோட பேசறோம். அதுக்கு அப்புறம் மிச்சம் இருக்கிற 4 மணி நேரம் அடுத்தடுத்த சீட்ல"...ஐயோ நினைக்கவே குஜாலா இருந்திச்சு. இப்ப ஒரு கனவு scene வைச்சே ஆகணுமே! நைட்லாம் travel பண்ணுன tiredness , கனவு காண Theme கிடைச்ச சந்தோசம், அப்படியே கண்ணை மூடினேன்.

திடீர்னு முழிச்சுப் பார்த்தா வண்டி நின்னுட்டு இருக்கு ஆனா யாருமே இல்லை. வெளியே எட்டிப் பார்த்தா Birmingham bus stand. அவசர அவசரமா வெளியே வந்து என் பைங்கிளியைத் தேடினேன். 2 நிமிசத் தேடலுக்கு அப்புறமா, அங்க இருந்த ஒரு கடைல கண்டு பிடிச்சேன். லண்டன் மாதிரி குளிராம இங்கே நல்ல வெயிலா இருந்திச்சு. அதனால என் ஆளு போட்டிருந்த Jocket ஐ கழட்டிட்டு ஒரு casual T-Shirt ஒட நின்னுட்டு இருந்திச்சு. 

அந்த கடைக்குள்ள நானும் போனேன். நான் நுழைஞ்சதை அவளும் பார்த்தா. கொஞ்சம் தைரியத்தை வர வைச்சிட்டு, அவளைப் பார்த்து போனேன். இன்னும் ரெண்டே ஸ்டெப் தான். அப்ப அவ Friend " Hey Stef, look at this " nu கூப்பிட. அவ திரும்ப 

எனக்கு அப்படியே ஒரு ஷாக். அவ T-shirt la "Going to be Bride" அப்படினு கொட்டை எழுத்துல எழுதி இருந்திச்சு. 

அப்படியே மனசு காத்து போன பலூன் மாதிரி ஆயிடிச்சு.எதுவும் பேசாம திரும்ப பஸ்-க்கு வந்துட்டேன். அவ பஸ்ல என்னைத் தாண்டி போகும் போது ஒரு மாதிரி confused ஆ எனைப் பார்த்தா. நான் ஜன்னல் பக்கமா திரும்பி வெளியே வேடிக்கை பார்க்க ஆரமிச்சுட்டேன். 

"நம்ம ஊருப் பொண்ணுக எல்லாம் வகிட்டுல குங்குமம் style ku வைக்கிற fashion வந்திட்ட மாதிரி, ஒரு வேளை இதுவும் Style காக இருக்குமோ?" என் மனசுக் கேள்வி கேட்டுச்சு. 

அப்போ மனசுக்குள்ள இன்னொரு குரல், "வேண்டாம்டா சாமி, Engaged ஆனது, Boy Friend இருக்கிற கேஸ்னு எல்லா episode um நாம பார்த்தாச்சு. மின்னலே, காதல் மன்னன்-னு  படத்துல வேணா எல்லாம் Happy ending ஆ இருக்கும். ஆனா உண்மையில சேது, பிதாமகன் மாதிரி Typical பாலா பட ending ஆ தான் முடியும். அதனால அமைதியா இருனு" சொல்லிச்சு. அதுவும் சரிதானு நினைச்சுட்டு, அப்படியே தூங்கிட்டேன். 

Preston வந்திருச்சுனு Driver announce பண்ணுனதும் தூக்கம் கலைஞ்சது. படிக்கட்டுல இறங்குறப்ப பின்னாடி அவ Friend அவளைத் திட்டறது அரை குறையா கேட்டிச்சு.

"Stef, you are so stupid. (தமிழாக்கம்) அவன் பேசலைனா என்ன? நீ பேசி இருக்க வேண்டியது தானே?! " .

இங்கேயே முற்றும்-னு போட்டு என் "David Becham Hair style" i Justify  பண்ணி முடிச்சிடலாம்னு தான் பார்த்தேன். ஆனா மனசாட்சி ஒத்துக்கலை. 

அதுக்கு என் பிகரு சொல்லிச்சு, "free ஆ விடு மச்சி,  ஓசில பீர் வாங்கித் தர வேற எவனாவது சிக்காமயா போயிடுவான்" - மறுபடி தலை சுத்த ஆரமிச்சது..ஏன் சார் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது?!

-பயணம் முடிவுற்றது.


ஞாயிறு, 10 ஜூன், 2012

ஏன் சார் எனக்கு மட்டும் இப்படி எல்லாம்???


இடம் : Preston பஸ் ஸ்டாண்ட்
நேரம் : 10:00 PM

10:40 க்கு லண்டன் செல்லும் பஸ் காக wait பண்ணிக் கொண்டு இருந்தேன். 

"இந்தியால பஸ் கிளம்புனதுக்கு அப்புறம், அடிச்சு பிடிச்சு, ஆட்டோ பிடிச்சு, ஓடற பஸ்ஸை ஓவர் டேக் பண்ணி, driver வாயாலே நாலு கெட்ட வார்த்தை திட்டு வாங்கி எப்பவும் ஊருக்கு போற நாயி, UK la 40 minutes முன்னாடியே போய் scene போடுறீயா??. கடுப்பேத்தறார் மை லார்ட்" னு உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கு நல்லாவே கேக்குது.

இதுக்கு முன்னாடி 2-3 தடவை train la லண்டன் போய் இருந்தாலும், bus la போறது இது தான் முதல் தடவை. அதுவும் இல்லாம இந்த ஊர்ல நம்மூரு மாதிரி அன்பான ஆட்டோ கார அண்ணன்களோ, நம்ம தலைவர் சூப்பர் ஸ்டார் போட்டோ வைச்சிருக்கிற ஒரே காரணத்தால பஸ்ஸை விட express speed ல ஓடற ஆட்டோவோ  இல்லை. அதனால தான் எதுக்கு ரிஸ்க்-னு கொஞ்ச நேரத்துலயே வந்துட்டேன். 

என்னையும் சேர்த்து பஸ் ஸ்டாண்ட்ல நாலே நாலு பேரு தான் இருந்தாங்க. அதிலே ஒரு ஜோடிப் புறா வேற!. ஒரு புறா ஊருக்குப் போக இன்னொரு புறா வழியனுப்ப வந்திருக்கு. 

நொடிக்கு ஒரு தரம், "I am going to Miss you Darling" சொல்லிட்டு ஒரு பேச்சிலர் பையன் இருக்காங்கற ஒரு இங்கிதம் கூட இல்லாம "பச்சக் பச்சக்" குடுத்துட்டே இருந்தாங்க. அந்தப் பையனுக்கு என் வயது கூட இருக்காது, ஆனா என்னமா பர்ஃபார்மென்ஸ் பண்றான் பய புள்ள!!!. நான்  அப்படியே "ஆஆவ்னு" வாயைத் திறந்து பார்த்துட்டு இருந்தேன். 

அதோட நிறுத்தாம அவன் கையை, சே சே கண்ட கண்ட இடத்தில எல்லாம் வைச்சிட்டு"இங்கேயே எல்லாமும் பண்ணிட்டா அப்போ வீட்டுல என்ன தாண்டா பண்ணுவீங்க" மௌனம் பேசியதே டயலாக் தான் நியாபகம் வந்துச்சு.

"செரி, இதைப் பார்த்துட்டு இருந்தா நமக்கு stomach burning தான் அதிகம் ஆகும்னு" அப்படியே வேற பக்கம் திரும்பி பார்த்தா, 

ஒரு தாத்தா "இது எல்லாம் சப்பை மேட்டர், என் வயசில இதை விட நான் சூப்பர் சூப்பர் மேட்டர் எல்லாம் பப்ளிக் ல பண்ணி இருக்கேன் தெரியுமா??" கிற மாதிரி ஒரு தெனாவெட்டு லுக் விட்டுட்டு அவரோட வேலையப் பார்க்க ஆரமிச்சாரு.

 "சரி, நமக்குத் தான் ஆண்டவன் கையைக் கொடுத்திருக்கானே, அதை வெட்டியா வைச்சுட்டு என்ன பண்ணனு" நினைச்சு பாக்கெட்க்கு உள்ளே அப்படியே கையை விட்டு மொபைலை எடுத்தேன்.  Facebook, gtalk ல அப்படியே நண்பர்களோட அரட்டை அடிச்சிட்டு time pass பண்ணிட்டு இருந்தேன்.

"மணி 10:20 ஆச்சே, இன்னும் பஸ் வரலையே, நாம correct ஆன place la தான் இருக்கோமானு" ஒரு சின்ன doubt.

 அப்ப தான் அந்த தாத்தா "Hey Young man " -னு கூப்பிட்டாரு. அட என்னைத் தாங்க!

"I forgot my reading glass today, can you help me to find out what time is the next bus to Blackpool" -னு பாவமாக் கேட்டாரு. "அதனால என்ன தாத்தா, நான் பார்த்து சொல்றேனு" பாசமா சொல்லிட்டு."Next bus is at 11 "-னு சொன்னேன்.

அதுக்கு அந்த தாத்தா, "யாரு பெத்த பிள்ளையோ நீ நல்லா இருப்ப ராசா, இந்தியக் காரங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்கயா!!! " ஏதோ நான் அவருக்கு என் சொத்தையே எழுதி வைச்ச range ku பாராட்டித் தள்ளிட்டாரு. 

அப்போ தான் நான் நினைச்சேன்"சே நம்மளால இந்தியா பெருமை எங்கேயோ போயிடிச்சு, நாளைக்கு எவனாச்சும் நாட்டுக்காக என்னடா பண்ணுனே, வெளி நாடு போய் உன் பாங்க் அக்கவுண்ட் பேலன்ஸ் தானே ஏத்துனேனு??"  கேட்டா, பெருமையா சொல்வேன், "பாங்க் பேலன்ஸ் மட்டும் இல்லடா நம்ம நாட்டோட பெருமையும் சேர்த்து தான் உயர்த்திட்டு வந்திருக்கேன்" என்று. 

மணி 10:30 ஆச்சு, அப்போ வெள்ளைக் கலர்ல "லண்டன்"-னு பேரு போட்டுட்டு ஒரு பஸ் வந்து நின்னுச்சு. டிப் டாப் ஆ பில் கேட்ஸ் Range ku கோட் சூட் லாம் போட்டுட்டு ஒருத்தன் இறங்கினான். கேட்டா அவன் தான் அந்த பஸ் டிரைவர் ஆம். என்ன கொடுமை சரவணன் இது!!! 

"சரி அவன் என்ன டிரஸ் போட்டிருந்தா நமக்கு என்ன? உருப்படியா வண்டியை ஓட்டுனா போதும்னு" நினைச்சிட்டு, அப்படியே Queue la போய் ஐக்கியம் ஆனேன். அந்த ஜோடிப் புறா அலும்பு இன்னும் அதிகம் ஆயிடிச்சு.

"Baby, take care da. நேரா நேரத்துக்கு Fridge la இருக்கிற பீர் ஐ குடிச்சு காலி பண்ணிடு. club la எவளாச்சும் பார்த்தா எஞ்சாய் பண்ணு, ஆனா வீட்டுக்கு லாம் கூட்டிட்டு போகாதே" கிற Range கு அந்த பொண்ணு அட்வைஸ் பண்ண..அந்த பையன் மறுபடியும் அவ வாயை லபக்-னு கவ்வி பர்ஃபார்மென்ஸ் காமிக்க ஆரமிச்சுட்டான்.

 "சரி போனா போகட்டும், இன்னும் 5 நிமிசத்துல இவன் தொல்லை முடிஞ்சிடும், இனி பஸ்ல ஏறி லண்டன் போற வரைக்கும் நிம்மதினு" நானும் பெருந்தன்மையா அவனை மன்னிச்சு விட்டுட்டேன்.

மணி 10:35, பஸ்ல ஏறலாம்னு ஸ்டெப் ல கால் எடுத்து வைக்கும் போது, உடம்புக்குள்ள ஒரு அலாரம் அடிச்சது. 

"ஆகா டேங்க் ஐ காலி பண்ண மறந்துட்டமேனு" அப்ப தான் நியாபகம் வந்துச்சு. 

அது என்னவோ தெரியலைங்க பஸ் ல travel பண்ணும் போது மட்டும், correct a பஸ் ஏறற நேரமா பார்த்து தான் இந்த அலாரம் அடிக்க ஆரம்பிக்கும். "இந்தியால தான் இந்தப் பிரச்சனைனு நினைச்சா, இங்கேயுமா? ". என்ன பண்ணலாம்னு ஒரு நிமிசம் யோசிச்சேன்.

 "6 மணி நேர பயணம். தாங்காது ராசா, நம்ம ஊரு மாதிரி புரோட்டா கடை பார்த்துலாம் நிறுத்த மாட்டான். நீயே யோசிக்கோ " என் மைண்ட் வாய்ஸ் சொல்றது தான் correct-னு தோணிச்சு.

"அண்ணே ஒரே நிமிசம்னு" டிரைவர் அண்ணனைப் பார்த்து சொல்லிட்டு, பிடிச்சேன் பாருங்க ஒரு ஒட்டம். 

ஓடற வேகத்தைப் பார்த்து, "பையன் ஒரு வேளை ஒலிம்பிக்ஸ் காக practice பண்றானோனு" அந்த ஜோடிப் புறா கூட அவங்க ரொமான்ஸ் ஐ நிறுத்தி வைச்சுட்டு என்னைப் பார்க்க ஆரமிச்சுதுங்க. அப்படியே போய், ரெஸ்ட் ரூம்ல நின்னா, "அப்பப்பா அந்த சுகத்தை லாம் சொல்ல முடியாது, அனுபவிச்சா தான் தெரியும்". 

ஒரு வேளையா வந்த வேலையை முடிச்சிட்டு, திரும்பி வந்த வேகத்துலயே ஓடிப் போனா நம்ம டிரைவர் அண்ணன் வண்டியைக் கிளப்பிட்டாரு. 

"ஸ்டாப்ப்ப்ப்ப்ப்ப்ப்" - அப்படியே கத்திட்டே போய் அவரு வண்டிக்கு குறுக்கா நிக்க, ஒரு சடன் ப்ரேக் போட்டு நிறுத்தினாரு.

 "டேய் பேமானி, உனக்கு சாவறதுக்கு வேற வண்டி எதுவும் கிடைக்கலையானு " அவர் லாங்க்வேஜ் ல திட்டிட்டே கதவைத் திறந்தாரு.

பஸ்ல ஏறி "அண்ணா மன்னிச்சுக்கோனா, ஏதோ சின்ன பையனு" ஆயிரம் தடவை சாரி கேட்டுட்டு. "எந்த ஊர்ல போனாலும் டிரைவர்ட கெட்ட வார்த்தைல திட்டு வாங்காம பஸ் ஏறினதே இல்லை இந்த தியாகராஜன்" -னு விஜயகாந்த் range ku ஒரு பஞ்ச் டயலாக் பேசிட்டு" சீட்ல போய் உட்கார்ந்தேன். 

அப்படியே ஏசிக் காத்து சிலு சிலுனு வீச, டேங்க் காலி பண்ணதால மனசில இருந்த உற்சாகம் வேற.."இனி நிம்மதியா தூங்கலாம் டா சாமி" நினைச்சிட்டு இருக்கும் போதே.

"Welcome to National Express. Service 421 to London..Blah blah blah.Wash rooms can be located at the rear of the bus" டிரைவர் அண்ணன் announce பண்ண

அப்படியே தலை சுத்த ஆரம்பிச்சது "என்னது, பஸ்-லயே ரெஸ்ட் ரூமா???" ஏன் சார் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது??? "

-ஒரு வழிப் பயணம் நிறைவுற்றது.

லண்டனிலிருந்து திரும்ப வந்த பயண அனுபவம்..மச்சி அவ உன்னைப் பார்க்கறாடா!!!

காத்திருப்பது தானே காதல் - பாகம் 6( முடிவுற்றது)

பாகம் -1பாகம் - 2 ,பாகம் -3பாகம் - 4பாகம் - 5

அடுத்த நாள் காலை - 7 மணி
இடம் : Avenham Park

மாலினி தான் ஆரம்பித்தாள். "த்யாகு, உன்னை முதல் முதலா ஆஸ்டால பார்த்தப்ப என் வாழ்க்கைல நீ இவ்வளவு impact create பண்ணுவேனு நினைக்கவே இல்லை. உண்மையை சொல்லணும்னா அப்போ உன்னைப் பத்தி கேவலமாத் தான் நினைச்சேன் "

நான், "இதுல ஆச்சர்யப்பட என்ன இருக்கு? நான் உன்னைப் பத்தி நினைச்சதை சொன்னா இன்னும் கேவலமா நினைப்ப. இப்ப அதுவா முக்கியம்? "

மாலினி, "அப்படி என்ன நினைச்ச " அவளால் ஆர்வத்தை அடக்க முடியாமல் கேட்டாள்.

நான் சிரித்துக் கொண்டே, "ஒரு நாள் கதையா எழுதறேன், படிச்சுத் தெரிஞ்சிக்கோ". 

மாலினி, "ஹும்..அப்புறம் அடுத்தடுத்து நாம மீட் பண்ணி, உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிடிச்சு. நீ என்னை வெளியே கூப்பிட்டப்ப எனக்கு கல்யாணம் ஆகப் போகுதுனு சொல்லவா வேண்டாமானு ஒரே confusion, ஆனா நீ எந்த எண்ணத்துல என்னை வெளியே கூப்பிடறேனு எனக்குத் தெரியலை. நீ ஒரு நட்போட கூப்பிட்டு இருந்து, எனக்கு நிச்சயம் ஆயிடுச்சுனு சொன்னா உன்னை ரொம்ப அவமானப் படுத்தின மாதிரி இருந்திருக்கும். அதனால தான் சொல்லலை"

அவள் ஏதோ ஒரு பெரிய குண்டு தூக்கிப் போடத் தான் இப்படி பீடிகையுடன் ஆரம்பிக்கிறாள் என்று என் மர மண்டைக்கு அப்போது தான் கொஞ்சம் புரிய, சீரியசாய் அடுத்து என்ன சொல்லப் போகிறாள் என கவனித்தேன். அவளாகத் தொடர்ந்தாள்.

"அப்புறம் நேத்து டின்னர், அதுக்கு அப்புறம் நமக்குள்ள நடந்தது. என் வாழ்க்கைல மறக்கவே முடியாத மூணு மணி நேரம் த்யாகு. இவ்வளவு சந்தோசமா இதுவரைக்கும் நான் இருந்ததே இல்லை. ரொம்ப தேங்ஸ் த்யாகு, உன்னை எப்பவும் நான் மறக்கவே மாட்டேன். ஆனா " சொல்லுவதற்கு தயங்கி நிறுத்தினாள்.

"ஆனா??? " கேள்விக்குறியுடன் அவளை நோக்கினேன்.

"ஆனா, இனிமேல் நமக்குள்ள எதுவும் வேண்டாம் " - அவளது கண்கள் கலங்கியது. என் பார்வையைத் தவிர்க்க முகத்தைத் திருப்பி வேறு பக்கம் பார்த்தாள்.

அதிர்ச்சியுடன் நான், " எதுவும் வேண்டாம்னா, புரியற மாதிரி சொல்லு மாலினி"

"இனி நாம பேச வேண்டாம் த்யாகு, நாம விலகி இருக்கிறது தான் ரெண்டு பேருக்கும் நல்லது " - அழுகையை அடக்கிக் கொண்டு பார்வையை இன்னும் என் பக்கம் திருப்பாமல் பதில் அளித்தாள்.எனக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. 

"மாலினி, பட் வொய். நீ மட்டும் சரினு சொல்லு, உங்க வீட்டுல நான் பேசறேன். உன் அப்பாவை கன்வின்ஸ் பண்ண முடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு"- உண்மையாகவே எனக்கு அந்த நம்பிக்கை இல்லாவிடிலும் அவளுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்காக சொன்னேன்.

மாலினியோ, "அது முடியாது த்யாகு, என் வீட்டைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும். என்னை வேண்டாம்னு தலை முழுகுவாங்கலே தவிர இதுக்கு என்னைக்கும் ஒத்துக்க மாட்டாங்க."

நான் பேச வாய் திறக்கும் முன், "எந்த சூழ்நிலைலயும் அவங்களை வேண்டாம்னு தூக்கிப் போட்டுட்டு என்னால வரவும் முடியாது "

நான், "அதுக்காக உனக்கு பிடிக்காத வாழ்க்கையை ஒத்துக்கப் போறியா?? "

மாலினி, " என் தலை எழுத்து அப்படி இருக்கும் போது மாத்தவா முடியும்???" விரக்தியாகப் பேசியவளைப் பார்த்து.

"முடியும் மாலினி, உன்னாலயோ, என்னாலயோ தனியா மாத்த முடியாது. ஆனா ரெண்டு பேரும் சேர்ந்து நின்னா மாத்த முடியும். எனக்கு நம்பிக்கை இருக்கு. என் பக்கத்தில நீ இருந்தா கண்டிப்பா என்னால முடியும். எனக்குத் தேவை உன்னிடம் இருந்து "யெஸ்"- கிற ஒரே ஒரு வார்த்தை தான்." இம்முறை உண்மையாகவே என் குரலில் நம்பிக்கை ஒலித்தது.

என் பக்கம் திரும்பிய மாலினி என்னைப் பார்த்தாள். "யெஸ் என்று சொல்லிவிடு மாலினி " - என்று என் கண்கள் அவளைக் கெஞ்சியது.

"அது அவ்வளோ ஈசி இல்லை த்யாகு. அதுவும் இல்லாம உனக்கு என்னை விட நல்ல பொண்ணு கிடைப்பா. யூ டிசெர்வ் எ பெட்டர் கேர்ள்" - என்று அழுது கொண்டே சொன்னாள்.

"மாலினி...I don't need a better girl, I just need you. யூ ஆர் தி, பெஸ்ட் கேர்ள் ஐ எவெர் குட் கெட்" - என்ற போது என் குரலும் தழுதழுத்தது.

அவள் அழுகை அதிகமானது. அதற்குப் பிறகு நான் எவ்வளவோ சொல்லியும், அவள் மனம் மாறவில்லை.எனக்கும் என்ன செய்வது என்றே புரியவில்லை. 5 நிமிட மௌனத்திற்குப் பிறகு,

"த்யாகு, நான் ரெண்டு வாரத்துல இந்தியா போறேன். ஜீலை -16 எனக்கு கல்யாணம். என்னை மறந்துட்டு நல்ல வாழ்க்கை அமைச்சுக்கோ, நான் கிளம்பறேன் " எங்கோ பார்த்து சொன்னாள்.

"இட்ஸ் ridiculous மாலினி. why the Hell are you worrying about me..Just go and get married to Mr. R.." சற்று கோபமாகவே சொன்னேன்.

ஒரு நிமிடம் என்னை உற்று நோக்கியவள் அழுது கொண்டே, "என்னைத் திட்டு உனக்கு அதுக்கான காரணம் இருக்கு, பட் என்னை "cheap" ஆ மட்டும் நினைச்சுடாதே ப்ளிஸ். வேற யார் நினைச்சாலும் தாங்கிப்பேன். ஆனா நீ அப்படி நினைச்சா அந்த நிமிசமே உயிரை விட்டிடுவேன் "

நான் சற்று நிதானமாகி, " மாலினி, மறுபடி யோசிச்சு முடிவெடு. இட்ஸ் நாட் டூ லேட். வீ வில் ஹேவ் எ வொண்டர்ஃபுல் ஃலைப்" என்றேன். பதில் ஏதும் கூறாமலேயே சென்றவளைப் பார்த்துக் கொண்டே நின்றேன்.

அதற்குப் பிறகு அடுத்த நாள் அவளை அலுவலகத்தில் பார்த்த போது அவள் என்னைப் பாராதவள் போல விலகிச் சென்றாள். எவ்வளவோ முயற்சி செய்தும் அவளிடம் பேசக் கூட முடியவில்லை, ஒவ்வொரு நாளும் என் ஃபோன் அடிக்கும் போது அது மாலினியிடம் இருந்து இருக்கக் கூடாதா என்ற எதிர்பார்ப்புடன் எடுத்து மீண்டும் மீண்டும் ஏமாந்து கொண்டு இருக்கிறேன்.ஒவ்வொரு முறையும் மெசெஜ் வரும் போதும்,

"என் வீட்டில் உன் வரவுக்காக 
நானும், என் வீட்டு மெழுகுவர்த்தியும்
உருகிக் கொண்டு இருக்கிறோம்"

என்று மாலினியிடம் இருந்து வந்திருக்கக் கூடாதா என்றெண்ணி ஏமாறுவது வாடிக்கை ஆகி விட்டது. 

மூன்றே நாள் மட்டும் பழகிய ஒரு பெண் எனக்குள் இப்படி ஒரு பாதிப்பு ஏற்படுத்துவாள் என நான் அறிந்திருக்கவில்லை. இன்னும் ஒரே வாரம் தான் என் மாலினி என்னை விட்டு தூரமாகச் சென்று இருப்பாள். அடுத்த சில நாட்களில் என் மாலினி வேறோருவனின் மாலினி ஆகி விடுவாள். நினைக்கும் போதே வலித்தது. ஆனாலும் ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கை, மாலினி எனக்காக மட்டுமே பிறந்தவள் என்று. என்றாவது ஒரு நாள் மனம் மாறி என்னைத் தேடி வருவாள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.. 

காத்திருக்கிறேன்காத்திருப்பேன் காத்திருப்பது தானே காதல்!!!

-காத்திருப்பு தொடரும் ஆனால் கதை முற்றும்.

பின் குறிப்பு :

இது என் உண்மைக் கதையா, கற்பனையா என நோண்டி நொங்கு எடுக்கும் நண்பர்களே, இதற்கு இரண்டு வரிகளில் பதில் சொல்ல விரும்புகிறேன்....

இது "அனைத்தும்" உண்மையா என்று கேட்டாள், இல்லை என்று பதில் அளிப்பேன்...
அப்படி என்றால் "எல்லாமே" டுபாக்கூரா என்றால், அதற்கும் இல்லை என்றே பதில் அளிப்பேன்...

வெள்ளி, 8 ஜூன், 2012

சாகும் வரை வேண்டுமடி!!!

இது 2004 ஆம் ஆண்டு இறுதியில் எழுதப்பட்ட கவிதை, முகம் தெரியாப் பெண்ணின் நட்பு எழுதத் தூண்டியது. இக்கவிதைக்கு பிறகு அவளின் தரிசனம் கிடைத்தது ஆனால் நிரந்தரமாக அல்ல. அவள் மட்டுமே படித்திருந்த கவிதை, அனைவரின் பார்வைக்காக...

காலை நேரப் பனித்துளியே
மாலை நேர மலரின் மணமே
சாலையோர மர நிழலே
எனைத் தழுவிய பூங்காற்றே
இவை ,
உணரத்தான் முடியுமடி
உருவம் தான் இல்லையடி!!!
நீ
உருவத்தை மறைத்து வைத்து
உணர்வாலே தீண்டியவள்..
வண்ணமிகு தேர் பூட்டி
வானவில்லை சிறகாக்கி
வளையோசை சத்தமிட
கனவுலகில் எனைக்
காண வந்த காரிகையே!
சின்ன சின்ன சிரிப்பினிலே
எனை சிதறடித்துச் 
சென்று விட்டாய்.
சன்னமான பார்வையிலே
எனை சாகடித்துச்
சென்று விட்டாய்!!!
சாகும் வரை வேண்டுமடி
பாவை உந்தன் தரிசனமே...