செவ்வாய், 5 ஜூன், 2012

காத்திருப்பது தானே காதல் - பாகம் 1

பாகம் - 2பாகம் - 3பாகம் - 4,பாகம் - 5பாகம் - 6

வியாழக்கிழமை மாலை 6:30 மணி,

அலுவலகம் முடிந்ததும் ஆஸ்டா சென்று அந்த வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு இருந்தேன். அப்போது, என் காதில் தேனாக ஒரு குரல் ஒலித்தது. தன்னிச்சை செயலாய் நிமிர்ந்து பார்த்தேன்.ஒரு பெண் யாருடனோ தமிழில் போனில் பேசிக் கொண்டு சென்று கொண்டு இருந்தாள்.

"ஏன், நான் சொல்றதைப் புரிஞ்சிக்கவே மாட்டேன்கிறீங்க" - அவள் குரலில் கோபமும் வருத்தமும் சேர்ந்து ஒலித்தது.

அப்படியே விண்ணைத் தாண்டி வருவாயா, த்ரிஷாவின் குரல் ஒரு நொடி என் மனதில் வந்து போனது .அவள் யாரென்று அறிந்து கொள்ளும் ஆவல் எனக்குள் தோன்றவே, அவளைப் பின் தொடர்ந்தேன். எனக்கு தேவை இல்லை என்றாலும் அவள் சென்ற செக்சன் எல்லாம் நானும் சென்றேன். அங்கே உள்ள பொருட்களை வாங்குவது போல், அவளது முகத்தைப் பார்க்க முயற்சித்தேன். ஆனாலும் அவள் ஒரு இடத்தில் நிற்காமல் செண்று கொண்டே இருந்ததால் அது முடியாமல் போயிற்று.

அவள் அடுத்ததாக இன்னொரு செக்சனில் நுழையவும், நான் திரும்பி சென்று, அதே செக்சனில், ஆனால் அவளுக்கு எதிர் திசையில் நுழைந்தேன்.அங்கே அவள் ஒரு கையால் ஃபோனைப் பிடித்துக் கொண்டு, மறு கையால் ஏதோ ஒரு பொருளை எடுக்க முயன்று கொண்டு இருந்தாள். அங்கே இருந்து அவள் முகம் தெளிவாகத் தெரியவில்லை.நானும் ஏதோ பொருளைத் தேடுவது போல, அவள் இருக்கும் திசையை நோக்கி நகர்ந்தேன்.அவளுக்கும் எனக்கும் ஒரு 10 மீட்டர் இடைவெளிதான் இருக்கும். அப்போது, அவள் தேடிய பொருள் கிடைக்க அதை கார்ட்-இல் வைக்க திரும்ப,அவளது தரிசனம் எனக்கு கிடைத்தது.

தேவதையைப் போல ஒரு பெண்ணை எதிர் பார்த்த எனக்கு பெரும் ஏமாற்றம். ஆண்கள் அகராதிப் படி சொல்ல வேண்டுமென்றாள் அவள் ஒரு அட்டு ஃபிகர்!!!

ஆனால் அவள் முகம் மிகவும் பரிச்சயமான முகம்.அதுவும் தமிழ் பெண்இவளை எங்கேயோ பார்த்து இருக்கிறேன்எங்கே??? எங்கே??? என் மூளையைத் தட்டி விட்டேன். ஒரு நொடி கூட வீணாக்காமல் என் மூளையிடமிருந்து பதில் வந்தது. "இந்த மாதிரி அட்டு ஃபிகரை எல்லாம் சேமித்து வைப்பது வேஸ்ட் ஆப் மெமரி" என்று.

"அதுவும் சரிதான். சுத்தியும் அழகான வெளி நாட்டுப் பெண்கள் பலர் இருக்கும் போது, நமக்கு இந்த மாதிரி வேஸ்ட் ஃபிகர் எல்லாம் எதுக்கு" என்று குட்டி குட்டி ஆடைகளுடன் இருக்கும் குட்டிகளை நோட்டமிட ஆரம்பித்தேன்.

என்னை இன்னும் நான் அறிமுகப் படுத்தவில்லை அல்லவா. நான் த்யாகு, பிழைப்பிற்காக வெளி நாடுகளில் தனது வாழ்க்கையை அடமானம் வைத்த தமிழர்களில் நானும் ஒருவன்.பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் கோயம்புத்தூரில்.இரண்டு வருடம் சாஃட்வேர் என்ஜினியராய், பெங்களூரில் செய்த கடின உழைப்பு உடனடி அமெரிக்கா வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது. மூன்று வருடம் அங்கே குப்பை கொட்டி விட்டு சில பல தனிக் காரணங்களால் மீண்டும் இந்தியா வந்து இரண்டு மாதம் கூட தாக்கு பிடிக்க இயலாமல்இதோ இப்போது யு.கே இல் (யுனைடெட் கிங்டம்) மான்செஸ்டர் பக்கத்தில் ஒரு சிறிய நகரத்தில் மீண்டும் வெளி நாட்டுக்கு சேவை செய்து கொண்டு இருக்கிறேன்.

எல்லாப் பொருட்களையும் வாங்கி விட்டு பில் போட சென்றேன்.எனக்கு முன்னால் சற்று நேரம் முன் பார்த்த அதே பெண் வரிசையில் நின்று கொண்டு இருந்தாள்.நான் அவளைக் கண்டு கொள்ளாமல், எனது மொபைல் ஐ எடுத்து நோண்ட ஆரம்பித்தேன். 


திடீரென ஏதோ விசும்பல் சத்தம் கேட்க. தலை தூக்கிப் பார்த்தேன்.அவள் அழுது கொண்டு இருந்தாள். என்ன தான் அட்டு ஃபிகர் என்றாலும், தாய்குலம் அழுகும் போது அதைப் பார்த்துக் கொண்டு இருப்பது மரத் தமிழனுக்கு அழகா? 

"எஃக்யூஸ்மீ" என்றேன்.
கண்களைத் துடைத்துக் கொண்டே திரும்பி பார்த்தாள். பக்கத்தில் பார்த்ததாளா இல்லை பரிதாபத்தில் பார்த்ததாளா தெரியவில்லை. ஆனால் இம்முறை கொஞ்சம் அழகாக தெரிந்தாள்அவளது ஈரமான கண்களில் ஏதோ ஒரு ஈர்ப்பு இருப்பது போலத் தோன்றியது.

"என்ன" என்பது போல பார்வையாலேயே கேட்டாள்
நான் தேவைக்கும் அதிகமான நேரம் அவள் கண்களைப் பார்த்ததை உணர்ந்து என்னை மனதிற்குள் திட்டிக் கொண்டே

"ஆர் யூ ஆல்ரைட்" என்று கேட்டேன். 
ஒரு நொடி என்னை உற்று நோக்கியவள்.
"இட்ஸ் நன் ஆஃப் யுவர் பிசினஸ்" என்று முகத்தில் அறைந்தது போல சொன்னாள்

அப்போதாவது, நான் வாயை மூடி இருக்க வேண்டும்ஆனால் எனது கெட்ட நேரம், "இல்லை உங்களை நான் இதுக்கு முன்னாடி பார்த்து இருக்கேன், அதனால தெரிஞ்சவங்கனு ஹெல்ப் பண்ண தான்" இம்முறை தமிழில் கதைத்தேன்

என்னை மேலும் கீழும் ஒருமுறை பார்த்து விட் டு
"திருடறதுல இது எங்க தாத்தா காலத்து டெக்னிக்ட்ரை சம் அதர் வே"  என்று நகர்ந்தாள்.

நான் அப்படியே ஷாக் அடித்து நின்றேன்
என் மனம் "இது தேவையா? தேவையா உனக்கு?" என்று வடிவேல் பாணியில் என்னைக் கிண்டல் செய்ததுஅதுவும், ஒரு நல்ல ஃபிகரிடம் அவமானப் பட்டிருந்தாலும் பரவாயில்லை.இப்படி ஒரு மொக்கை பீஸ் இடம் பல்பு வாங்கியது ரொம்ப அவமானமாக இருந்தது.

சுற்றும் முற்றும் பார்த்தேன், நல்ல வேளை தெரிந்தவர்கள் யாரும் இல்லை.
"கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை" என்பது போல ஒரு பெருமிதத்துடன் நகர்ந்தேன்

-காத்திருப்பு தொடரும்.

1 கருத்து:

Gokul சொன்னது…

திருடறதுல இது எங்க தாத்தா காலத்து டெக்னிக்...idhu than panchuuuuuuu