செவ்வாய், 5 ஜூன், 2012

காத்திருப்பது தானே காதல் - பாகம் 3.

பாகம் -1பாகம் - 2,பாகம் - 4,பாகம் - 5பாகம் - 6

சனிக்கிழமை காலை 6 மணி

எப்போதும் காலை 11 மணி வரை அடித்துப் போட்டது போலத் தூங்கும் நான், அன்று அவ்வளவு நேரத்தில் எந்திரித்தது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. மணியைப் பார்த்து விட்டு மீண்டும் உறங்க முயற்சித்தேன். ஆனால் ஏனோ தெரியவில்லை தூக்கம் வரவில்லை. என்ன செய்வது என யோசித்து விட்டு, சரி ஜாக்கிங் போகலாம் என்று எழுந்து கிளம்பினேன்.

என் வீட்டிலிருந்து 5 நிமிட நடை தூரத்தில் இருக்கும் Avenham Park -இல் ஓட ஆரம்பித்தேன். Hate that I love you என்று Rihanna வின் குரல் காதில் ஒலிக்க காலை நேர சூரியனின் ஒளிக்கதிர், அங்கிருந்த நதியில் பட்டு ஜொலிக்கும் அழகை
ரசித்துக் கொண்டே ஒடிக் கொண்டு இருந்தேன். அப்போது எதிரில் ஒரு பெரிய நாய் வருவதைக் கண்டு, ஓடும் வேகத்தைக் குறைத்தேன். 

"மொச பிடிக்கிற நாயை மூஞ்சியைப் பார்த்தாலே தெரியும்னு" சொல்வார்கள். ஆனால் இது நாய்க்கு கூட தெரிந்து இருக்கும் என எனக்குத் தெரியவில்லை. நான் அதைப் பார்த்து பம்புவதைக் கண்டு என்னை நோக்கி வேகமாக வர ஆரம்பித்தது.
உடனே ஓடுவதை நிறுத்து விட்டு அங்கிருந்த மரத்தின் பின் சென்று ஒளிய முற்பட்டேன். அதற்குள் அதன் ஓனர் ஒரு விசில் சத்தம் கொடுக்க அப்படியே சடன் ப்ரேக் அடித்து நாய் நின்றது.

அவர், என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே, "டோண்ட் வொரி மேட், மை டாக் வில் கிஸ் ஒன்லி யங் கேர்ள்ஸ் " எனக் கிண்டல் அடிக்க. அதற்கு ஒரு அசட்டு சிரிப்பை பதிலாய் கொடுத்து வெளியே வர

"நாய் னா அவ்வளவு பயமா?" - குரல் கேட்ட திசையில் திரும்ப, அங்கே மாலினி என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தாள். நான் அவளை அங்கே எதிர்பார்க்கவே இல்லை. அதுவும் அப்படி ஒரு சூழ்நிலையில்

"பயம் இல்லை, எனக்கு நாய் சுத்தமா பிடிக்காது. அது பக்கத்துல வந்து எனக்கு பிடிக்காம, கோபத்தில நான் அதை உதைச்சு, செத்து கித்து போயிடுச்சுனா. பாவம் தேவையில்லாம ஒரு உயிர் போயிடும்னு முன்னெச்சரிக்கை தான்" என்று சிரித்துக் கொண்டே பதில் அளித்தேன். 

அவள் பக்கத்தில் வந்து என் முகத்தை உத்துப் பார்த்து விட்டு, "ஆமா, கரெக்ட்" என்றாள்.

நான் "என்ன?" என்றேன்.

அவள், " மீசையில மண் இருக்கானு பார்த்தேன், ஆனா மீசையே இல்லை..அதனால் மண்ணும் இல்லை" இருவரும் சேர்ந்து சிரித்தோம். அப்படியே சேர்ந்து நடக்க ஆரம்பித்தோம்.

மறுபடி மாலினி தான் ஆரம்பித்தாள், "என்ன தினமும் ஜாக்கிங் வருவயா? " அவள் ஒருமையில் அழைத்ததே எங்கள் இருவருக்கும் இடையே ஒரு comfort zone உருவாகிக் கொண்டு இருக்கிறது என்பதை உணர்த்தியது.

நான், "ஆமா, ஆனா எப்பவும் ஈவ்னிங் வருவேன்." என்றேன்.

அவள், "ஓ அதனால தான் நான் உன்னை இங்க பார்த்ததே இல்லை. இன்னைக்கு மட்டும் என்ன விஷேசம், காலைல வந்திருக்கே " என்றாள்.

"ஓ அதுவா? என்னோட ராஜகுமாரியை இங்க மீட் பண்ற மாதிரி கனவு கண்டேன். ஆனா எந்த டைம்னு தெளிவாத் தெரியலை. அது தான் காலைல இருந்தே தேட ஆரம்பிக்கலாம்னு" அவளது முகம் சிறிது வெட்கப் படுவது போல எனக்குத் தோன்றியது.

"எப்படிக் கண்டு பிடிப்ப உன்னோட ராஜகுமாரியை " புருவத்தை உயர்த்தியவாறே கேட்டாள்.

"ரொம்ப சிம்பிள், அவ வரும் போது, அப்படியே புகை மூட்டமா இருக்கும், அதை அப்படியே விலக்கிட்டு வெள்ளைக் கலர் ட்ரெஸ் ல என்னோட ராஜகுமாரி அப்படியே ஸ்லோமோசன் ல வருவா" என்றேன்.

"ஹா ஹா ஹா, சினிமா பார்த்து ரொம்ப கெட்டு போயிட்ட. குட் லக்" என்றாள் சிரித்துக் கொண்டே. 

"ஆர் யூ இன் ஃபேஸ்புக்" எனது ஃபோனை எடுத்துக் கொண்டே கேட்டேன். அவளது ஐடி கொடுத்தாள். ரிக்வெஸ்ட் கொடுத்ததும், அவளது ஃபோனை எடுத்து என் ரிக்வெஸ்ட்டை அக்செஃப்ட் பண்ணிக் கொண்டாள். என்னை ஏதோ உந்த அவளது ரிலேசன்ஷிப் ஸ்டேட்டஸ் பார்த்தேன். "சிங்கிள்" என்றது. என் மனதிற்குள் ஒருவிதமான சந்தோசம் பரவியது. அவளது ப்ரொபைல் பிக்சர் ஏதோ ஒரு திருமண வீட்டுப் பந்தியில் ஒரு பெரிய இலை போட்டு, அதில் நிறைய ஐட்டம் போட்டு சாப்பிட்டுக் கொண்டிருப்பது போல இருந்தது. அதைப் பார்த்ததும் சிரித்தேன்.

"என்ன சிரிப்பு?" - அவள் நான் எதுக்கு சிரிக்கிறேன் எனத் தெரிந்தே கேட்டாள்.

"உன் இலை இருக்கிற சைஸ் கும் உன்னோட சைஸ் கும் சம்மந்தமே இல்லை. போதுமா இலை ல இருக்கிற ஐட்டம் லாம்" - என்று நக்கலாகக் கேட்டேன்.

"கண்ணு வைக்காதப்பா, இப்படி எல்லாரும் கண்ணு வைச்சு தான் நான் ஒல்லியாவே இருக்கேன் " என்று கண்ணை சிமிட்டி ஒரு குழந்தையைப் போல சொன்னவளைப் பார்த்து சிரித்தேன்.

தனுஷ், படத்தில் ஒரு டயலாக் வரும், " என்னைப் பார்த்தவுடன் பிடிக்காது, பார்க்க பார்க்க தான் பிடிக்கும்" என்று. இந்த நொடி வரை அது ஆண்களுக்கு மட்டும் தான் பொருந்தும் என நம்பிக் கொண்டு இருந்தேன்.மாலினி எனது நம்பிக்கையைப் பொய்யாக்கிக் கொண்டு இருந்தாள். அந்த நொடியில் மாலினி என் கண்களுக்கு ஒரு அழகிய தேவதையாய் தெரிந்தாள்!!! 

"ஹே, என்ன அமைதி ஆயிட்ட " - மாலினியின் குரல் என்னைக் கலைத்தது.

"ஒண்ணும் இல்லை, நீ இன்னைக்கு எவ்வளவு ஐட்டம் முழுங்கப் போறேனு, யோசிச்சிட்டு இருந்தேன்" - வாயில் வந்ததை உளறினேன்.

அவள், "நீ வேற, இங்க வந்ததுல இருந்து வெறும் பிட்ஸா, பர்கர் மட்டும் தான், ஒரு நல்ல இந்தியன் ரெஸ்டாரண்ட் ஆ போய் ஒரு நாள்  ஃபுல் கட்டு கட்டணும்"

உடனே நான், " அவ்வளவு தானே, வுட் யூ லைக் டூ கோ ஃபார் டின்னர் வித் மீ டுநைட்?" எதையுமே யோசிக்காமல் கேட்டு விட்டேன்.

அவள் ஒரு நொடி அப்படியே நின்றாள். ஏதோ சொல்ல வந்தவள், சொல்லாமல் அமைதியானாள்.

அப்போது தான் நான் கொஞ்சம் அவசரப் பட்டதை உணர்ந்தேன். காரணம்,இங்கே ஒரு ஆணும் பெண்ணும் தனியாக டின்னர் போவது என்பது டேட்டிங் போவது போல.மற்ற பெண்கள் என்றால் சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள், ஆனால் நமது பெண்கள் நிறைய யோசிப்பார்கள்.அவளுக்கும் இது மனதில் தோன்றியிருக்க வேண்டும்.என்ன நினைத்தாள் என்று எனக்குத் தெரியவில்லை.

அவளது மௌனம், எனது இதயத் துடிப்பை அதிகரித்துக் கொண்டே இருந்தது.

அப்போது அவள் வாயைத் திறக்க, என்ன சொல்லப் போகிறாள் என்ற எதிர்பார்ப்புடன் அவளையே நோக்கினேன்.

-காத்திருப்பு தொடரும்.

7 கருத்துகள்:

யுகேந்தர்(கல்லூரி ஜூனியர்) சொன்னது…

நல்லா இருக்கு ... தொடரட்டும் உங்கள் கலை/இலக்கிய சேவை.....

இதில் சில பல உண்மை சம்பவங்கள் இருக்குமென நான் திடமா நம்புறேன்...

Unknown to myself சொன்னது…

நன்றி நண்பா,

ஏதோ என் மனத் திருப்திக்காக கிருக்கிக் கொண்டு இருக்கிறேன்...முழுவதுமாகக் கற்பனையில் எழுதும் அளவிற்கு எனக்கு திறன் இல்லை..எது நிஜம், எது கற்பனை என்பதைக் கண்டு பிடிக்கும் பொறுப்பை உன்னிடமே விட்டு விடுகிறேன்.

-த்யாகு.

Gokul சொன்னது…

எந்தப் பெண்ணும் என்னை இவ்வளவு உன்னிப்பாக கவனிக்க வைத்தது இல்லை - I dont have any comment

Unknown to myself சொன்னது…

கோகுல்..பப்ளிக்..பப்ளிக் :)

FunScribbler சொன்னது…

//"சிங்கிள்" என்றது. என் மனதிற்குள் ஒருவிதமான சந்தோசம் பரவியது//

இயல்பான உணர்வை அழகையாய் எழுதி இருக்கீங்க!! very nice:))

FunScribbler சொன்னது…

//மற்ற பெண்கள் என்றால் சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள், ஆனால் நமது பெண்கள் நிறைய யோசிப்பார்கள்.//

பயம் தான் பாஸ்!!! கொஞ்சம் friendlyயா பேசிட்டா, பசங்க தப்பா புரிஞ்சுகிறாங்களே? hehehe!!

anyway, reading this 3rd part! great flow man! could visualise each scene:)

Unknown to myself சொன்னது…

//பயம் தான் பாஸ்!!! கொஞ்சம் friendlyயா பேசிட்டா, பசங்க தப்பா புரிஞ்சுகிறாங்களே? hehehe!! //

first first a, என் ப்ளாக் பக்கம் வந்திருக்கீங்க, அதனால வந்தவுடனயே ஒரு போர் வேண்டாம் :) ஆனா கண்டிப்பா ஒரு நாள் இந்த விசயத்துல பட்டி மன்றம் நடத்துவோம்!

anyway, reading this 3rd part! great flow man! could visualise each scene:)

நொம்ம தேங்ஸ்-ங்க :)